Home நிகழ்வுகள் இந்தியா கரோனா தாக்கம்; ஈரானில் இருக்கும் இந்தியர்களை அழைத்துவர முயற்சி

கரோனா தாக்கம்; ஈரானில் இருக்கும் இந்தியர்களை அழைத்துவர முயற்சி

0
352
மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெயசங்கர்

கரோனா தாக்கம்; ஈரானில் இருக்கும் இந்தியர்களை அழைத்துவர முயற்சி

ஈரானில் கரோனா வைரஸ் பரவி வருவதால் ஈரானில் இருக்கும் இந்தியர்களை மீட்டு இந்தியாவிற்கு அழைத்துவர இந்தியா வரப்போவதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெயசங்கர் கூறியுள்ளார்.

ஈரானைச் சுற்றியுள்ள தீவுகளில் 300 தமிழக மீனவர்கள் மற்றும் மொத்தம் 500க்கும் மேற்பட்ட இந்தியா மீனர்களை காக்க வேண்டும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு தமிழக முதல்வர் கடிதம் எழுதியுள்ளார்.

சீனா, கொரியாவை தொடர்ந்து ஈரானிலும் கரோனா வைரஸ் பரவி வருகிறது. இதனால் பல இடங்களில் விமான போக்கு வரத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

மார்ச் 1ஆம் தேதி ஜெயசங்கர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சரகத்தில் இது குறித்து பேசி வருவதாக பதிவிட்டுள்ளார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here