ஆகஸ்டில் கல்லூரிகள் துவங்கும்: யுஜிசி அறிவித்துள்ளது. கொரோனா தொற்றின் காரணமாக பொது முடக்கத்தால் இந்தியாவில் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ள நிலையில் பல்கலைக்கழக மாநில குழு (யுஜிசி) அறிவித்துள்ளது.
புதுடெல்லி: கடந்த மார்ச் மாத இறுதியில் இருந்து ஊரடங்கு காரணமாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. ஒவ்வொரு வருடமும் மாணவ மாணவியரின் கல்வி ஆண்டு ஜூன் மாதத்தில் துவங்கும்.
தற்போதைய கொரோனா நோய் அச்சுறுத்தலால் நாடெங்கும் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. மேலும் வரும் நாட்களில் இந்த நோயின் தீவிரம் படிப்படியாக குறையும் என நம்பிக்கை உள்ள நிலையில்,
வரும் ஆகஸ்ட் மாதத்தில் கல்லூரியில் ஏற்கனவே கல்வி பயிலும் மாணவர்களுக்கு கல்லூரிகள் திறக்கப்பட்டு பாடத்திட்டம் ஆரம்பிக்கப்படும். புதிதாக வரும் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு செப்டம்பரில் கல்லூரிகள் திறக்கப்படும்.
இறுதி ஆண்டு தேர்வுகளை எழுதவேண்டிய மாணவர்களுக்கு ஜூலையில் தேர்வுகள் நடத்தப்படும். இடைநிலை மாணவர்கள் (intermediate students) தற்போதைய மற்றும் முந்தைய செமஸ்டரின் உள் மதிப்பீட்டின் அடிப்படையில் அடுத்த கட்டத்திற்கு அனுப்பப்படுவார்கள்.
மேலும் கொரோன தாக்கம் குறைந்து கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட மாநிலங்களில் ஜூலையில் விடுபட்ட தேர்வுகள் நடத்தப்படும் என யூஜிசி அறிவித்துள்ளது.
பல்கலைக்கழகங்கள் வாரத்திற்கு ஆறு நாட்கள் பணி என்ற முறையை பின்பற்றவும் மேலும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பயண விவரங்களை கண்காணிக்கவும் யூஜிசி பல்கலைக்கழகங்களுக்கு பரிந்துரைத்துள்ளது.
M.Phil, Phd, முதலிய பட்ட மேற்படிப்புகளுக்கு மேலும் 6 மாத கால நீட்டிப்பை வழங்கியும், வாய்மொழி தேர்வை காணொளி காட்சி வாயிலாக நடத்தவும் அறிவுத்தப்பட்டுள்ளது.
மற்றும் கொரோனா வைரஸ் நிலைமை எப்படி உள்ளது, ஊரடங்கின் வழிமுறைகளை பின்பற்றி அரசின் அறிவுறுத்தலின் படி அனைத்தும் செயல்படுத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளது.