Home நிகழ்வுகள் இந்தியா இந்தியாவில் கொரானாவிற்கு 58 பேர் உயிரிழப்பு

இந்தியாவில் கொரானாவிற்கு 58 பேர் உயிரிழப்பு

318
0

புதுடில்லி: வைரஸ் தொற்றுக்கு திங்கட்கிழமை ஒரே நாளில் நாடு முழுவதும் இறந்தவர்களின் எண்ணிக்கை 58 ஆக உயர்ந்துள்ளது, இந்த உயிரிழப்பு எண்ணிக்கை இதுவரை இல்லாத அளவுக்கு அதிகமாகும்.

இந்தியாவில் கோவிட்-19 தொற்றுக்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 30,000 ஐ நெருங்குகிறது.

மத்தியப்பிரதேசத்தில் இந்தூரில் நேற்று இரவு நேரத்தில் மேலும் 1,709 புதிய தொற்றுகள் பதிவாகியுள்ள நிலையில், மொத்த நோய் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 29,571 ஆக அதிகரித்துள்ளது.

மகாராஷ்டிரா மற்றும் குஜராத்தில் முறையே அதிக எண்ணிக்கையில், 522 மற்றும் 247 புதிய தொற்றுகள் பதிவாகியுள்ளன.

இந்தூரில் 196 புதிய தொற்றுகள் பதிவானதால், மொத்த எண்னிக்கை 1,372 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 27 இறப்புகளுடன் மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது.

மும்பையில் பதிவான 369 புதிய வழக்குகளைச் சேர்த்தது, கோவிட் வழக்குகளில் டெல்லி 3,000 ஐ தாண்டியது இந்த எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை எண்னிக்கையை விடக் 293 குறைவு.

இதுவரை நோய்த்தொற்றைக் கட்டுக்குள் வைத்திருக்க முடிந்த இரண்டு மாநிலங்களான பீகார் மற்றும் ஜார்க்கண்ட் முறையே, 68 மற்றும் 20 புதிய வழக்குகளை பதிவு செய்துள்ளன

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here