மக்கள் 21 நாள் ஊரடங்கு உத்தரவு இருப்பதால் வருகிற மாதம் வங்கியில் வாங்கிய கடனுக்கு இஎம்ஐ செலுத்துவது பற்றி ரிசர்வ் வங்கி ஆலோசித்து வருகிறது
கடந்த மாதம் சீனாவில் உருவான கொரோனா வைரஸ் நூறு நாடுகளுக்கு மேல் பரவி மக்களை அச்சுறுத்தி வருகிறது.
பத்தாயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் பலி லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு அடைந்துள்ளார்கள்.
இந்தியாவில் நேற்று மோடி 21 நாள் சுய ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தார். கடந்த ஞாயிற்றுக் கிழமையிலிருந்து மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளது.
இந்தியாவின் பொருளாதாரம் தற்போது கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளதால் யாரும் அதைப்பற்றி கவலைப்பட வேண்டாம். மக்களின் உயிரே நமக்கு முக்கியம் என 21 நாள் சுய ஊரடங்கு உத்தரவை பின்பற்ற வேண்டும் என்று பிரதமர் மோடி நேற்று அறிவித்துள்ளார்.
இதனால் எந்த ஒரு அலுவலகமும் செயல்படவில்லை, குறுந்தொழில் மற்றும் பெரும் தொழில் மிகப்பெரிய பாதிப்படைந்துள்ளது
சம்பளம் பிடித்தம் இல்லாத விடுமுறையை நிறுவனங்கள் அளிக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.
ஆனால் அன்றாட கூலி வேலை செய்பவர்கள் சிறு வணிகம் செய்பவர்கள் மிகவும் பாதிக்கப் பட்டுள்ளார்கள்.
வங்கியில் வீட்டுக் கடன், கார் கடன், தொழில் கடன் போன்று வாங்கி உள்ளவர்கள் மாதாமாதம் இஎம்ஐ செலுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
அதனால் ரிசர்வ் வங்கிக்கு பல தரப்பிலிருந்து ஆறு மாதங்கள் வரை இஎம்ஐ மக்களிடம் வசூலிக்க வேண்டாம் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளது.
இது ரிசர்வ் வங்கியின் கவனத்துக்குச் சென்றது. வங்கியில் பெற்ற கடனை திருப்பிச் செலுத்துவதில் சிரமங்கள் நேரலாம் இதை கருத்தில் கொண்டு சில சலுகைகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து ரிசர்வ் வங்கியின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில் :
“வங்கியில் வாங்கிய கடனுக்கு இஎம்ஐ செலுத்துவதில் சிக்கல் ஏற்படும் ஆதலால் மக்களுக்கு இது சில சலுகைகள் தேவைப்படுகிறது.
ரிசர்வ் வங்கிகள் கருத்தில்கொண்டு சில முடிவுகள் எடுப்பது அவசியமாகிறது. இந்திய வங்கி கூட்டமைப்பும் இதே கோரிக்கையை முன்வைத்துள்ளது.
ரிசர்வ் வங்கி இது குறித்து ஆலோசித்து விரைவில் அறிவிப்பை வெளியிடும்” என கூறியுள்ளார்.
இதனால் வங்கியில் கடன் வாங்கியவர்கள் இஎம்ஐ கட்டுவதில் காலம் நீட்டிப்பு அல்லது வட்டி தள்ளுபடி செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்த நிர்மலா சீதாராமன் மக்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு வருகிற மூன்று மாதங்களுக்கு ஏடிஎம்மில் பணம் எடுத்தால் கட்டணம் வசூல் செய்யப்படாது என்று கூறியிருந்தார்.
குறைந்தபட்ச இருப்பு தொகை எதுவும் வங்கியில் வைக்க வேண்டிய அவசியம் இல்லை என எஸ்பிஐ வங்கியும் விதிகளைத் தளர்த்தி உள்ளது.
குறு மற்றும் சிறு தொழில் செய்பவர்கள், சுயதொழில் செய்பவர்கள் கொரோனா வைரஸ் காரணமாக காரணமாக 21 நாட்கள் வீட்டில் இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
இதனால் மாதத்தவணை எப்படி கட்டுவது என அஞ்சு வருகிறார்கள். இவர்களின் கவலையைப் போக்க ரிசர்வ் வங்கி நல்ல சலுகைகளை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.