கொல்கத்தா:ஆம்பன் புயலால் பாதிப்படைந்த அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மற்றும் அடிப்படை சேவை அமைப்புகளை சரி செய்ய தங்களுக்கு இந்திய இராணுவத்தின் உதவி தேவைப்படுவதாக மேற்க்கு வங்க அரசு தெரிவித்துள்ளது.
மேலும் அரசு மனித ஆற்றல் மற்றும் உபகரணங்களுக்கு தனியார் நிறுவனங்களையும் நாடியுள்ளது.
மேலும் உள்துறை அமைச்சகத்தின் தகவலின்படி மேற்கு வங்க அரசு அடிப்படை கட்டமைப்புகள் மற்றும் சேவைகளை சரிசெய்வதற்கு ஒற்றை தலைமையின் கீழ் அனைத்து துறைகளையும் இயக்க முடிவு செய்துள்ளது.
இராணுவ உதவியை நாடிய அரசு
“தேசிய பேரிடர் மீட்பு குழு மற்றும் மாநில பேரிடர் மீட்பு குழு ஆகியன முடுக்கிவிடப்பட்டுள்ளன; மேலும் இராணுவ உதவி கேட்டுள்ளதாக தெரிகிறது”.
குடிநீர் வசதி மற்றும் கழிவு நீர் வடிகால் வாரியம் ஆகியவை விரைவில் சீர் செய்யப்பட்டு வருகிறது மற்றும் பொது சுகாதார பொறியியல் துறை புயல் பாதிக்கப்பட்ட இடங்களில் குடி தண்ணீர் பாக்கெட்டுகளை வழங்கி வருகிறது.
புயலால் விழுந்த மரங்களை அப்புறப்படுத்தும் பணி
” அவசர தேவைகளுக்கு மின்னியற்றிகள் வாடகைக்கு எடுக்கப்பட்டு உள்ளன. பல்வேறு துறைகளை சார்ந்த 100க்கும் மேற்பட்ட குழுவினர் புயலால் விழுந்த மரங்களை அப்புறப்படுத்துதல் மற்றும் மின்சாரம் துண்டிக்கப்பட்டதை சரிசெய்யும் பணிகளில்
ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்”.
கொல்கத்தா மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் ஆம்பன் புயல் தாக்கி 3 நாட்கள் ஆகியும் மின்சாரம் மற்றும் தண்ணீர் இல்லாததால் ஏற்பட்ட பிரச்சனைகளினால் ஏற்பட்ட போராட்டங்களின் காரணமாக இந்த நடவடிக்கைகளை மேற்கு வங்க அரசு எடுத்துள்ளதாக
தெரிகிறது.