Home நிகழ்வுகள் இந்தியா கள்ளக்காதல்: ட்ரைவரை ஆசிட்டில் கரைத்து கொடூரக்கொலை செய்த டாக்டர்

கள்ளக்காதல்: ட்ரைவரை ஆசிட்டில் கரைத்து கொடூரக்கொலை செய்த டாக்டர்

426
0
கள்ளக்காதல்

கள்ளக்காதல்: விரூவை ஆசிட்டில் கரைத்து கொடூரக்கொலை செய்த டாக்டர்

சுனில் மந்திர் மத்தியப்பிரதேச மாநிலத்தில் ஹோசங்காபாத் நகரில் எலும்பு அறுவைச் சிகிச்சை மருத்துவராகப் பணிபுரிகிறார்.

இவரிடம் பிரேந்திர பச்சவுரி என்பவர் கார் ஓட்டுனராகப் பணிபுரிந்துள்ளார். அவருடைய மனைவியுடன் டாக்டர் கள்ளக்காதலில் ஈடுபட்டுள்ளார்.

டாக்டரும் ட்ரைவரின் மனைவியும் தகாத உறவில் ஈடுபட்டுள்ளனர். இருவரின் கள்ள உறவுக்கு ட்ரைவர் பிரேந்திர பச்சவுரி இடைஞ்சலாக இருந்துள்ளார்.

இதனால் ட்ரைவருக்கு மயக்கமருந்து கொடுத்த டாக்டர் உடனடியாக கொலை செய்ய முடிவு செய்துள்ளார்.

ட்ரைவரின் உடலைத் துண்டு துண்டாக வெட்டியுள்ளார். வெட்டிய உடல் பாகங்களை ஆசிட் நிரப்பிய ட்ரம்மில் வைத்துள்ளார்.

நாட்கள் செல்லச் செல்ல உடல் அழுகி துர்நாற்றம் வீச ஆரம்பித்துவிட்டது. இதனால் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் போலீசாருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.

500-க்கும் மேற்பட்ட துண்டுகள் வீட்டிற்குள் கிடப்பதைப் பார்த்து போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக டாக்டர் சுனில் மந்திரை கைது செய்தனர்.

இந்தக் கொலைக்கும் ட்ரைவரின் மனைவிக்கும் தொடர்பு உள்ளதா என போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Previous articleஅஜித்தின் 21 வயது மகள்; எப்படி சாத்தியம்?
Next articleஸ்ரீபெரும்புதூர்: தந்தை நினைவிடத்திற்கு பிரியங்கா வருகை!
Editor in Chief & Founder of MrPuyal.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here