E-Gram சுவராஜ் அப்; வலுவான கிராமங்களே ஜனநாயகத்தின் தூண், பஞ்சாயத்து ராஜ் சட்டத்தின் இயற்றப்பட்ட நாளை முன்னிட்டு E-Gram சுவராஜ் வலைப்பக்கம் மற்றும் மொபைல் செயலியை துவக்கி வைத்தார் மோடி.
பஞ்சாயத்து ராஜ் சட்டத்தின் இயற்றப்பட்ட நாள் முன்னிட்டு பேசிய பிரதமர் மோடி கிராமத்தில் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகள் தாங்களே நிர்வாகம் செய்யும் உரிமையை பெறுகிறார்கள்.
மத்திய, மாநில அரசுகளின் அதிகாரிகள் தங்கள் அதிகாரத்தை உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளுடன் பகிர்ந்துகொள்வது இதன் முக்கிய நோக்கமாகும்.
கொரோனா பரவும் இந்த கடினமான சூழலில் ஊராட்சிகளின் பங்கு மிகவும் முக்கியமானது. கிராமங்களே ஜனநாயகத்தின் தூண்கள் என்றார்.
கிராமங்கள் மற்றும் நகரங்களுக்கு இடையேயான வளர்ச்சி இடைவெளியை குறைக்க வேண்டும். கிராமப்புற சுயாட்சியை உறுதிப்படுத்துவதே இ-கிராம் ஸ்வராஜ் செயலியின் நோக்கமாகும்.
இந்தியா முழுவதும் உள்ள பெரும்பாலான கிராமங்கள் தற்போது டிஜிட்டல் மயமாக்கப்பட்டு உள்ளன. இதனால் எளிதாக அனைத்து தகவல்களையும் பிற சேவைகளையும் எளிதில் கொண்டு சேர்க்க இயலும்.