இந்திய நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு 11000க்கும் மேற்பட்ட அரசியல் விளம்பரங்களை பேஸ்புக் தளத்திலிருந்து அகற்றி உள்ளது பேஸ்புக் நிறுவனம்
டிக்டாக் நிறுவனத்திற்கு சொந்தமான ஹலோ (Helo) செயலியின் அரசியல் தொடர்பான விளம்பரங்களை தனது தளத்திலிருந்து அகற்றியது பேஸ்புக் நிறுவனம்.
ஹலோ செயலி எந்தவித அரசியல் கட்சியையும் ஊக்குவித்தோ அல்லது தாழ்த்தியோ விளம்பரம் செய்யவில்லை.
தங்களுடைய சுய தேவைக்காக அரசியல் தலைவர்களின் படங்களை பயன்படுத்தி விளம்பரம் செய்வதாக பேஸ்புக் தரப்பில் இருந்து கூறப்பட்டுள்ளது.
மேலும் விகோ வீடியோ (Vigo Video) செயலியின் 49 விளம்பரங்கள் அகற்றப்பற்றுள்ளதாகவும் ஷேர்ஜாட் (Sharechat) செயலியின் 5 விளம்பரங்களும் அகற்றப்பற்றதாக பேஸ்புக் தெரிவித்துள்ளது.
வருகிற நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு அனைத்து அரசியல் தொடர்பான விளம்பரங்களையும் அகற்ற வேண்டும் என தேர்தல் ஆணையம் பேஸ்புக் மற்றும் ட்விட்டர் நிறுவனத்திடம் தெரிவித்துள்ளது.
ஹலோ செயலி தேர்தல் முடியும் வரை எந்த வித தேர்தல் தொடர்பான விளம்பரங்களை காட்சி செய்யமாட்டோம் என தேர்தல் ஆணையத்திற்கு மெயில் அனுப்பியுள்ளது.