தொழிலதிபர்களுக்கு மட்டுமே மத்திய அரசு உதவுகிறது – ராகுல் சாடல்
மோடியின் தலைமையிலான பாஜக ஆட்சியில், இந்திய இளைஞர்கள் வேலையில்லாமல் திண்டாடுகின்றனர்.
நம் நாட்டின் வலம் அனைத்தும் சில தனி நபர்களின் பிடியில் உள்ளது. கோடிகோடியாய் வங்கியை ஏமாற்றியவர்கள் கடன்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன.
ஆனால் மாணவர்கள் வேலையில்லாமல் திண்டாடுகின்றனர். விவசாயிகள் கடன், கல்விக்கடன் தள்ளுபடி செய்யப்படுவதில்லை.. காங்கிரஸ் கட்சி ஆட்சியில் அமர்ந்தால் கல்விக்கான நிதியை அதிகரிக்கும்.
சீனாவில் 24 மணி நேரத்தில் 50000 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படுகிறது. ஆனால், இந்தியாவில் வெறும் 500 வேலைவாய்ப்புகள் மட்டுமே உருவாக்கப்படுகிறது.
இவ்வாறு டெல்லியில் மாணவர்கள் முன்னிலையில் நடந்த காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் ராகுல்காந்தி உரையாற்றினார்.