மத்திய அரசு செவ்வாய்கிழமை கலால் வரியை பெட்ரோல் ஒரு லிட்டருக்கு ரூ.10 த்தும் டீசல் ஒரு லிட்டருக்கு ரூ.13 னும் உயர்த்தி உத்தரவிட்டது. இந்த அறிவிப்பு மே 6 முதல் நடைமுறைக்கு வரும் என மத்திய அரசு அறிவித்தது.
கச்சா எண்ணெய் விலை குறைந்தது
கொரோனா ஊரடங்கால் கச்சா எண்ணெய் விலை குறைந்து ஒரு பீப்பாய்க்கு 23.86 டாலர் என்று இருக்கும் பொழுது இந்த கலால் வரி அதிகரிப்பை மத்திய அரசு அறிவித்துள்ளது. மேலும் அதிகாரிகள் இந்த அறிவிப்பினால் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் தற்போது மாற்றம் இருக்காது என அறிவித்தார்கள்.
மத்திய அரசு அறிவித்துள்ள கலால் வரி உயர்வில் பெட்ரோலுக்கான ரூ.10 கலால் வரியில் உயர்வில் ரூ. 8 சாலை மற்றும் உள்கட்டமைப்பு வரி (ROAD AND INFRASTRUCTURE) எனவும் ரூ. 2 சிறப்பு கலால் வரி எனவும் தெரிவிக்கப்படுகிறது.
அதேபோல், டீசலுக்கு விதிக்கப்பட்ட ரூ. 13 கலால் வரியில், ரூ. 8 சாலை மற்றும் உள்கட்டமைப்பு வரி எனவும் ரூ.5 சிறப்பு கலால் வரி எனவும் தெரிவிக்கப்படுகிறது.
வரி வருவாய் வளர்ச்சி பணிகளுக்கு பயண்படுத்தப்படும்
” இந்த வரிகளினால் வரும் வருவாயை உள்கட்டமைப்பை மேம்படுத்துவதிலும் மற்றும் வேறு வளர்ச்சிப் பணிகளிலும் பயன்படுத்தப்படும்,” என அதிகாரிகள் தெரிவித்தனர்.
“இந்த மாற்றங்களால் பெட்ரோல் மற்றும் டீசல் சில்லறை விற்பனை விலையில் எந்த மாற்றமும் இருக்காது , அதனால் நுகர்வோருக்கு எந்த பாதிப்பும் இருக்காது,” என அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.