Home நிகழ்வுகள் இந்தியா ஆம்பன் புயல் குவாஹத்தி நகரத்தை தாக்கும். எச்சரிக்கை விடுப்பு!

ஆம்பன் புயல் குவாஹத்தி நகரத்தை தாக்கும். எச்சரிக்கை விடுப்பு!

குவாஹத்தி

குவாஹத்தி: அசாமின் குவாஹத்தி நகரத்தை உள்ளடக்கிய கம்ருப் மாநகராட்சிக்கு புதன் மாலை ஆம்பன் புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதி தீவிர ஆம்பன் புயலானது வடக்கிலிருந்து வடகிழக்கு நோக்கி நகர்ந்துள்ளதால் இந்த அறிவிப்பை மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

வானிலை ஆய்வு துறை அறிவிப்பு

ஆம்பன் புயல் குவாஹத்தி நகரத்தை உள்ளடக்கிய அந்த மாநகராட்சியை தாக்க இருப்பதாக வானிலை ஆய்வுத்துறையிடமிருந்து அறிவிப்பு வந்திருப்பதாக அந்த மாநகராட்சியின் பேரிடர் மேலாண்மை அதிகாரமையத்தின் தலைமை செயல் அதிகாரி தெரிவித்தார்.

“புயல் பாதிப்பு பரவலாக உணரப்பட வாய்புள்ளது அதனால், அனைத்து துறை சார்ந்த அதிகாரிகளும் புயலுக்கு பின் வரும் எத்தகைய சூழ்நிலையையும் எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும்,” என அந்த எச்சரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புயலை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும்

“ஆந்த பகுதியை சார்ந்த மக்கள் அனைவரும் புயலை எதிர்கொள்ள தயாராக இருக்கும்படியும் மற்றும் மிகவும் எச்சரிக்கையுடன் இந்த சூழ்நிலையை எதிர்கொள்ளவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அவசர உதவிகள் அனைத்தும் உடனடியாக சரிபார்கப்பட வேண்டும் மற்றும் அப்படி சரியாக இல்லாத பட்சத்தில் மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்க வேண்டும்,” என அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here