Home நிகழ்வுகள் இந்தியா ஓநாய் முகம்: ஹைப்பர் ட்ரிக்கோசிஸ் சிறுவன் வேதனை!

ஓநாய் முகம்: ஹைப்பர் ட்ரிக்கோசிஸ் சிறுவன் வேதனை!

345
0
ஓநாய் முகம்

ஓநாய் முகம்: ஹைப்பர் ட்ரிக்கோசிஸ் சிறுவன் வேதனை!

ஓநாய் மனிதனை ஹாலிவுட் படங்களில் அடிக்கடி பார்த்திருப்போம். உடல் முழுவதும் முடி வளரும் காட்சிகளை ஷங்கர் படத்தில் பார்த்திருப்போம்.

உண்மையிலேயே அதுபோன்ற மனிதர்கள் உள்ளனர். ஹைப்பர் ட்ரிக்கோசிஸ் (ஓநாய் நோய்க்குறி) என்ற நோய் உள்ளவர்களுக்கு விலங்குகளைப் போன்று உடல் முழுவதும் அடர்த்தியான ரோமங்கள் வளரும்.

இந்த நோயால் பாதிக்கப்பட்ட மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த லலித் பாட்டீடர் (13) என்ற சிறுவன் மிகவும் கவலை தெரிவித்துள்ளான்.

அவனை புதிதாகப் பார்ப்பவர்கள் குரங்கு என நினைத்து கல்லால் அடிக்கின்றனராம். அந்த சிறுவனுக்கு காவல்துறை அதிகாரியாக வேண்டுமாம்.

தவறு செய்பவர்களைப் பிடித்து சிறையில் அடைக்க வேண்டும் எனக் கூறியுள்ளார். இந்தியா முழுவதும் அந்த சிறுவனுக்கு ஆதரவு குவிந்துள்ளது.

பலர் முகநூலில் ப்ரோபைல் படமாக அவனுடைய படத்தை வைத்துள்ளனர். அவனுடைய பள்ளி நண்பர்கள் லலித்திடம் அன்பாகவே பழகுகின்றனர்.

பிறக்கும்போதே முகம் முழுவதும் அதிக முடிகள் இருந்தது. எனவே மற்றவர்களை போல் என்னால் இருக்க முடியாது. எனவே நான் மகிழ்ச்சியாக நிம்மதியாவும் உள்ளேன் எனத் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here