இந்தியாவில் 1,897 புதிய covid-19 தொற்றுகள், 73 இறப்புகள் பதிவாகியுள்ளன. கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு இந்தியாவில் பாதிப்பு எண்ணிக்கையும், இறப்பு எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.
கொரோன் வைரஸ் இறப்புகளின் எண்ணிக்கை இன்று 1,000-ஐ தாண்டியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 73 இறப்புகளை மாநிலங்கள் பதிவு செய்துள்ளன. இதனால் மொத்தமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 1007 ஆக உயர்ந்துள்ளது.
இதுவரை பதிவான எண்ணிக்கையில் ஒரே நாளில் அதிக எண்ணிக்கையிலான இறப்புகள் பதிவாகியுள்ளது முதன்முறையாகும். தினசரி கொரோனா வைரஸ் புதிய தொற்றுகளில் இந்தியா, தொடர்ந்து உயர்வையே சந்தித்து வருகிறது.
கடந்த 24 மணி நேரத்தில் 1,897 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 31,332 ஆக உயர்ந்துள்ளது.
மகாராஷ்டிரா மற்றும் தமிழ்நாட்டில் செவ்வாய்க்கிழமை அதிக எண்ணிக்கையிலான வழக்குகள் பதிவாகியுள்ளன. மஹாராஷ்டிராவில் செவ்வாய்க்கிழமை குறைந்தது 728 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இருப்பது உறுதி செய்யப்பட்டது.
கொரோனா வைரஸ் நோயால் மிக அதிகமாக பாதிக்கப்பட்ட மாநிலமான மகாராஷ்டிரா, கடந்த 24 மணி நேரத்தில் எண்ணிக்கையில் உயர்ந்து மொத்த எண்ணிக்கையில் 9,318 ஆக உயர்ந்துள்ளது.
இம்மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்று காரணமாக 30-க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். இதனால் இறந்தவர்களின் எண்ணிக்கை 400-ஐ எட்டியுள்ளது.
டெல்லியில் மொத்த கொரோனா வைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கை 3,314 ஆக உயர்ந்துள்ளது. தொடர்ச்சியாக மூன்றாவது நாளாக 200-க்கும் மேற்பட்டோர் தலைநகரில் புதிதாக பதிவு ஆகியுள்ளனர்.
டெல்லியில் இதுவரை 54 பேர் இறந்தனர். தமிழ்நாட்டில் செவ்வாயன்று 121 பேருக்கு கோவிட்-19 நோய்த்தொற்றுடன் உறுதி செய்யப்பட நிலையில், தமிழ்நாட்டின் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,000 ஐத் தாண்டியுள்ளது.
குஜராத்திலும் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸ் எண்ணிக்கையில் கணிசமான உயர்வு காணப்பட்டது, 196 பேர் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளனர்.
குஜராத் மாநிலத்தில் குறைந்தது 181 பேர் இதுவரை உயிரிழந்தனர். கொரோனா வைரஸ் பாதித்து மீண்டவர்களில் இந்தியா கிட்டத்தட்ட 25 சதவீதத்தைப் பதிவு செய்துள்ளது.
இதுவரை 7,696 பேர் இந்த நோயிலிருந்து குணப்படுத்தப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில், குணமாய்ந்தவர்கள் விகிதம் 50% க்கும் அதிகமாக உள்ளது. 2,058 கோவிட்-19 நோயாளிகளில், 1,168 பேர் இதுவரை குணமடைந்துள்ளனர்.
டெல்லியில், மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய நோயாளிகளின் எண்ணிக்கை 1,078 ஆக உள்ளது. கொரோனா பாதிப்பை முதன் முதலில் பதிவு செய்தது கேரளா.
இங்கு இதுவரை 359 நோயாளிகளை குணமாகியுள்ளனர். கேரளாவில் 485 கொரோனா வைரஸ் நோயாளிகள் இருந்தனர்.