புதுடெல்லி: இந்த கொரோனா ஊரடங்கு காலத்தில் 40 ஆண்டுகள் இல்லாத அளவிற்கு காற்று மாசு(CO2) குறைவு ஏற்பட்டுள்ளதாகவும், கரியமில வாயு(CO2) வெளிப்பாடு அளவு குறைந்துள்ளதாகவும் அண்மையில் ஆற்றல் மற்றும் காற்று தூய்மைக்கான ஆய்வு மையத்தில்(CREA) பணிபுரியும் லாரி மயில்லிவிர்டா மற்றும் சுனில் தாகியா ஆகியோர் செய்த ஆய்வில் தெரியவந்துள்ளது.
இந்த ஆய்வு அறிக்கையில், கரியமில வாயு(CO2) வெளியீட்டின் அளவு கடந்த ஆண்டு மார்ச் மாதத்தை ஒப்பிடும் பொழுது இந்த மார்ச் மாதத்தில் 15% குறைந்துள்ளதாகவும், ஏப்ரல் மாதத்தில் இது 30% குறைந்துள்ளதாகவும் கடந்த ஆண்டுடன் ஒப்பிட்டு கூறியுள்ளனர்.
(CO2) வெளியீட்டின் அளவு 3 கோடிவரை குறைவு
நிலக்கரி, எண்ணை மற்றும் எரிவாயு ஆகியவற்றின் அண்மை கால பயண்பாட்டின் அளவுகளை பார்க்கும் பொழுது, கரியமில வாயு(CO2) வெளியீட்டின் அளவு 3 கோடி டன் வரை கடந்த வருடத்தை காட்டிலும் 2019-2020 காலகட்டத்தில் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஆய்வாளர்கள் கூற்றுப்படி மின்சாரம் மற்றும் போக்குவரத்து துறை ஆகியவையால் இந்த கரியமில வாயு வாயுவின் அதிகமாக வெளியிடப்பட்டு வந்துள்ளதாகவும், அனல் மின் நிலையம் மட்டும் ஒருவருடத்திற்கு 92.9 கோடி டண் அளவுக்கு கரியமில வாயுவை உமிழ்ந்து வந்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.
“புதைபடிவ எரிபொருள்(FOSSIL FUEL) பயண்பாட்டின் அளவு குறைந்ததே சுற்றுசூழலில் இந்த கரியமில வாயுவின்(CO2) அளவு குறைந்ததற்கு காரணம்” என தாகியா கூறினார். கொரோனா ஊரடங்கினால் ஏற்பட்ட வாகன போக்குவரத்து நிறுத்தமும் இந்த காற்றில் உள்ள கரியமில வாயுவின் (CO2) அளவை வெகுவாக குறைத்துள்ளது என அவர் தெரிவித்தார்.