ஞாயிற்று கிழமை மாலை குறைந்த அளவிலான தொடர்வண்டி சேவையை துவங்க இருப்பதாக இந்திய தொடர்வண்டி துறை அறிவித்த பிறகு, முன்பதிவுகள் அனைத்தும் இந்திய தொடர்வண்டி உணவுவழங்கல் மற்றும் சுற்றுலாக் கழகத்தின்(IRCTC) இணையதளத்தில் ஆன்லைனில் மட்டுமே மாலை 4 மணி முதல் செய்யமுடியும் என அறிவித்தது. இந்த இணையதளம் தற்போது அதிக இணைய பயண்பாடு காரணமாக மெதுவாக செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இணையதளத்தில் உள்ளே நுழைவதில் சிரமம்
மாலை 4 மணிக்கு பின், சரியாக வேலை செய்யவேண்டிய 15 சிறப்பு தொடர்வண்டி பதிவுக்காண இந்திய தொடர்வண்டி உணவுவழங்கல் மற்றும் சுற்றுலாக் கழகத்தின்(IRCTC) இணையதளத்தில், பயணாளர்கள் உள்ளே நுழைவதற்கும், முன்பதிவு செய்வதிற்கும் சிரமத்தை சந்தித்தனர்.
இதை அடுத்து முன்பதிவு நேரத்தை இந்திய தொடர்வண்டி துறை தள்ளிவைத்தது. எனவே இந்திய தொடர்வண்டிதுறை “15 சிறப்பு தொடர்வண்டிகளுக்கான முன்பதிவை இரண்டு மணி நேரம் கழித்து 6 மணிக்கு துவங்கப்படும்,” என அறிவித்தது.
ஆன்லைனில் மட்டுமே முன்பதிவு
மேலும் இந்த முன்பதிவானது கைபேசி செயலி மற்றும் ஆன்லைன் மூலமாக மட்டுமே நாடைபெறும் எனவும் எந்த முகவர்களோ அல்லது நேரடியாகவோ செய்ய முடியாது என்பதையும் மேலும் 7 நாட்களுக்கு இந்த முன்பதிவு செயல்படும் எனவும் தொடர்வண்டித்துறை அறிவித்தது.