ஆப் அன்னி நிறுவனம் (app annie) வெளியிட்டுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டிக்டாக் செயலி (tiktok app), இந்திய பயனாளர்கள் நேரத்தில், 550 கோடி மணி நேரம் விழுங்கியுள்ளதாம்.
ஆப் அன்னி (app annie) நிறுவன ஆய்வின் முடிவில் வெளியான அதிர்ச்சி தரும் தகவல்கள்; 2019-ல் இந்தியர்கள் செலவழித்த நேரம் 550 கோடி மணிநேரம். இந்தியா இரண்டாமிடம். சீனா முதலிடம்.
டிக்டாக் செயலி (TikTok App)
2017-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியிடப்பட்ட டிக்டாக் செயலியை ஐ.ஓ.எஸ் மற்றும் ஆண்ட்ராய்டு தளத்தில் பயன்படுத்தலாம்.
பேஸ்புக், வாட்ஸ்ஆப் என பல சமூக செயலிகள் இருந்தும் மக்கள் பெரிதும் விரும்புவது டிக்டாக் செயலியை மட்டுமே.
பிறந்த குழந்தை முதல் பாட்டி வரை அனைவரையும் இந்த செயலி கவர்ந்திழுத்து வருகிறது. தங்கள் நடிப்புத் திறமை, ஆட்டம், பாட்டம் என தனித்திறமைகள் அனைத்தையும் இதில் வெளிப்படுத்த நினைத்து அதில் மூழ்கி வாழவேண்டிய நேரங்களை இதிலேயே போக்குகின்றனர்.
சிலர் பிரபலமாக நினைத்து ஆபாசமாகவும், அருவருக்கத்தக்க வகையிலும் வீடியோக்களை வெளியிட்டு தங்கள் வாழ்க்கையில் பிரச்சனைகளை தாங்களே ஏற்படுத்திக் கொள்கின்றனர்.
வெறும் லைக்கை மட்டும் வைத்து என்ன செய்ய முடியும் என்பதை உணராமல் தங்கள் வாழ்க்கையின் அழகிய நேரங்களை இதில் வீண் செய்கின்றனர்.
நேரத்தை விழுங்கும் டிக்டாக்
கடந்த 2019-ம் ஆண்டு மட்டும் இந்தியர்கள் டிக்டாக் செயலியில் செலவழித்த நேரம் சுமார் 550 கோடி மணிநேரம் ஆகும்.
2017ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியிடப்பட்ட டிக்டாக் செயலி இதுவரை சுமார் 32.3 கோடி முறை டவுன்லோட் செய்யப்பட்டுள்ளதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆப் அன்னி ஆய்வு முடிவு (app annie report 2019)
2017-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியிடப்பட்ட டிக்டாக் செயலிக்கு 2018-ம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை 90 கோடி மணிநேரம் இந்தியர்கள் செலவிட்டுள்ளனர்.
2019-ம் ஆண்டு அதையும் மிஞ்சியது 2019 டிசம்பர் வரை இந்தியர்கள் டிக்டாக்கில் செலவழித்த நேரம் சுமார் 550 கோடி மணிநேரம் ஆகும்.
2018 டிசம்பர் முதல் 2019 டிசம்பர் வரை ஒப்பிடும் போது 2019 டிசம்பரில் டிக்டாக் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 90 சதவீதம் அதிகரித்து முதல் இடத்தில் டிக்டாக் செயலியை கொண்டு வந்துள்ளனர்.
அதே நேரம் பேஸ்புக் செயலி 15 சதவீதம் உயர்ந்து 15.6 கோடி முறை டவுன்லோட் செய்யப்பட்டுள்ளதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆப் அன்னி நிறுவனத்தின் வேலை என்ன?
மொபைல் தரவுகளை (data) பகுத்தாய்வு செய்யும் நிறுவனம். மொபைல் தரவுகள் மற்றும் மொபைல் கம்பெனிகள் தரும் இலவச ஆப்களை ஆராய்ந்து அதன் தரத்தினை வாடிக்கையாளர்களுக்கு சிறந்த முறையில் உணர்த்தும் ஒரு தனியார் நிறுவனம்.
இந்நிறுவனம் 2010-ம் ஆண்டு சான் ஃப்ரான்சிஸ்கோவில் தொடங்கப்பட்டு தற்பொழுது தனது 12 கிளைகளை உலகம் முழுக்க பரப்பியுள்ளது.
மொத்தம் 1,100 நிறுவனங்களை வாடிக்கையாளர்களாகவும்; 1 மில்லியன் பதிவு செய்யப்பட்ட வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது இந்நிறுவனம்.
மொபைல் நிறுவனங்கள் தங்கள் வளர்ச்சியில் ஆப் அன்னி நிறுவனத்தின் பங்கு பெரிதும் இருப்பதாக நம்புகின்றனர்.
சமூக வலைதளங்கள் பொழுது போக்கிற்காக மட்டுமே என்பதையும் தாண்டி தாங்கள் வாழவேண்டிய நேரங்களைப் போக்குகிறது என்று உணராமல் மக்கள் டிக்டாக்கில் மூழ்கிவிடுகின்றனர்.