மஹாராஷ்டிராவில் தொழிற்சாலைகள் திறக்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. மஹாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா பாதிப்புகள் இல்லாத பச்சை மண்டலத்திற்கு மட்டும் இதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மும்பை: உலகளவில் பேரும் இழப்புகளை ஏற்படுத்திவரும் கோவிட்-19 எனப்படும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகம் காட்டி வருகிறது. நேற்றைய நிலவரப்படி இந்தியாவில் 1,00,000-ஐ நெருங்கியுள்ளது கொரோனா பாதிப்பு.
இந்தியாவில் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் முதல் இடத்தில் மகாராஷ்டிரா தான் தொடர்ந்து முதல் இடத்தில் இருந்துவருகிறது. இங்கு இதுவரை 33000 பேருக்கும் அதிகமானோர் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ளனர்.
மும்பையில் மட்டும் 20000-க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேபோல் பூனே, தானே, நவி மும்பை, அவுரங்காபாத் ஆகிய பகுதிகளிலும் கொரோனா தொற்று அதிக அளவில் உள்ளது.
இந்நிலையில் மஹாராஷ்டிராவில் கட்டுப்பாடுகளை தளர்த்த முடியாது என அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே அறிவித்தார். ஆனால் பாதிப்பு இல்லாத பச்சை மண்டலத்தில் தொழிற்ச்சாலைகள் இயங்க அனுமதி வழங்கியுள்ளார்.
பொது முடக்கத்தில் கட்டுப்பாடுகளை தளர்த்திக்கொள்ள மாநில அரசுகள் முடிவெடுத்துக்கொள்ளுமாறு மத்திய அரசு அறிவித்திருந்தது. இதனால் ஒவ்வொரு மாநிலமாக ஊரடங்கில் தளர்வுகளை அறிவித்து வருகின்றன.
இந்நிலையில் மஹாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே ஊரடங்கால் கொரோனா தொற்று பரவலை முடிவுக்கு கொண்டுவர முடியாது எனினும், அதனால பரவலை கட்டுப்படுத்த முடியும் இன்றி குறிப்பிட்டிருந்தார்.
கொரோனா பாதிப்புகள் தொடர்ந்து அதிகரிப்பதால் கட்டுப்பாடுகளை தளர்த்த முடியாது என்று மகாராஷ்டிரா முதல்வர் அறிவித்தார். எனினும் பச்சை மண்டலங்களில் மட்டும் தொழிற்சாலைகள் இயங்க அனுமதி வழங்கியுள்ளார்.
பாதிப்புகள் இல்லாத பச்சை மண்டலங்களில் மட்டும் 50000 தொழிற்ச்சாலைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மற்ற பகுதிகளுக்கு இந்த தளர்வு பொருந்தாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.