ஜடேஜா மனைவி ரிவாபா பாஜகவில் இணைந்தார்
ரவீந்திர ஜடேஜா, இந்தியக் கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டராகத் திகழ்பவர். ஜடேஜாவும் ரிவாபாவும் சில நாட்களுக்கு முன் பிரதமர் மோடியை நேரில் சந்தித்தனர்.
இந்நிலையில், குஜராத் மாநிலத்தில் உள்ள ஜாம் நகர் பகுதியில் நேற்று பாஜக கட்சிக் கூட்டம் நடைபெற்றது.
அந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பூணம் மாடம் முன்னிலையில் ரிவாபா பாஜக கட்சியில் இணைவதாக அறிவிக்கப்பட்டது. ரிவாபாவை காவித்துண்டு அணிவித்து கட்சியில் சேர்த்துக் கொண்டனர்.
கடந்த வருடம் சாலையில் சென்ற போலீசார் ஒருவரை ரிவாபா ஓங்கி அடித்ததாக சர்சையில் சிக்கியது குறிப்பிடத்தக்கது.