ஜெசிக்கா லால் கொலை வழக்கு குற்றவாளி விடுதலை செய்யப்பட்டுள்ளார். ஆயுள் தண்டனை வழங்கப்பட்டு சிறையில் இருந்துவந்த நிலையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
புதுடெல்லி: 1999-ம் ஆண்டு நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய மாடல் அழகி ஜெசிக்கா லால் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளி மனு சர்மா.
இவர் தற்போது சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளார். இது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நன்னடத்தை காரணமாக இவர் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
1990-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 30-ல் டெல்லியில் உள்ள டாமரின்ட் உணவகத்தில் நடந்த கொலை சம்பவம் நாடு முழுதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
முன்னாள் மத்திய அமைச்சர் வினோத் ஷர்மாவின் மகன் மனு சர்மா டாமரின்ட் உணவகத்தில் வைத்து மாடல் அழகி ஜெசிக்கா லாலை துப்பாக்கியால் சுட்டு கொன்றார்.
தான் மது ஊற்றி கொடுக்க சொன்னதை செய்யாததால் ஜெசிக்காவை சுட்டுகொன்றதாக மனு சர்மா தனது வாக்குமூலத்தில் தெரிவித்திருந்தார். இந்த வழக்கில் கீழமை நீதிமன்றம் அவரை விடுதலை செய்தது.
ஆனால் இதனை எதிர்த்து பல போராட்டங்கள் கிளம்பிய நிலையில் உயர்நீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்து மனு ஷர்மாவை குற்றவாளி என தீர்ப்பளித்து அவருக்கு ஆயுள் தண்டனை அளித்தது.
இதனை எதிர்த்து மனு சர்மா சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதனை அடுத்து 2010-ம் ஆண்டு மனு ஷர்மாவின் ஆயுள் தண்டனையை உயர்நீதிமன்றம் மீண்டும் உறுதி செய்து தீர்ப்பளித்தது.
இதனால் இவர் திகார் சிறையில் தண்டனை அனுபவித்து வந்தார். 17 ஆண்டுகளுக்கும் குறைவான தண்டனையே இவர் இதுவரை அணுவத்துள்ள நிலையில் நன்னடத்தை காரணமாக விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
இதற்கான ஆணையை டெல்லி துணை நிலை ஆளுநர் அணில் பைஜால் பிறப்பித்துள்ளார். முன்னதாக நன்னடத்தை காரணமாக இவர் திறந்தவெளி சிறைக்கு மாற்றப்பட்டார்.
அங்கு இருந்தபடியே அவர் கைதிகளின் மறுவாழ்வுக்கு உதவும் வகையில் NGO ஒன்றில் பணியாற்றி வந்தார். 2010-ல் அளித்த பெட்டியில் ஜெசிக்காவின் தங்கை சப்ரினா லால் பேசினார்.
அப்போது அவர் ‘நாங்கள் மனு லாலை மன்னித்துவிட்டோம். அவரை விடுதலை செய்வதில் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என தெரிவித்திருந்தார்.