செயற்கை மழை (Cloud Seeding) என்பது இயற்கை மேகங்கள் மீது அம்மோனியா போன்ற வேதிப்பொருட்களைத் தூவி மழையைப் பெய்ய வைப்பது ஆகும்.
இந்த முறையில் ஏற்கனவே கர்நாடகா அரசு, அந்த மாநிலத்தில் மழைப் பொழிவை நிகழ்த்தி உள்ளது.
தற்பொழுது இதற்காக ரூ.88 கோடி செலவில் இரண்டு ஆண்டுகள் செயற்கை மழைத் திட்டத்தைத் துவங்கியுள்ளது.
இதன் மூலம் மேகங்களை கர்நாடகாவின் மீது கூடச் செய்து வெயிலின் அளவைக் குறைக்க முடியும்.
பருவமழை கிட்டத்தட்ட சரியாகப் பெய்யும் கர்நாடக மாநிலமே இந்தத் திட்டத்தைக் கையில் எடுத்து உள்ளது.
சென்னையில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது. ஆனால் தமிழக அரசு மழை நீரை சேமிக்கும் திட்டங்களைக் கூட முறையாக செய்வதில்லை.
செயற்கை மழை பாதிப்புகள்
செயற்கைமழையை ஏற்படுத்தும் ரசாயனப் பொருட்கள் நீரில் கலப்பதால் அது மனிதர்களுக்கு பெரிய அளவில் பதிப்பை ஏற்படுத்துவதில்லை.
ஆனால் சிறு சிறு உயிரினங்களுக்கும் சிறு சிறு பயிர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என ஆய்வில் கூறப்பட்டு உள்ளது.
செயற்கைமழையால் இயற்கையாக மழை பெய்யக் கூடும் இடங்களில் மழை பொய்த்து போய் பஞ்சம் ஏற்பட வாய்ப்பு உண்டு.
ஒரே இடத்தில் மேகங்களை கூட்டி மழைப்பொழிவை நிகழ்த்தும்போது அதிக அளவில் மழையைப் பெய்து வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தவும் வாய்ப்பு உண்டு.
ஒரு சில நேரங்களில் செயற்கைமழைக்குத் தேவையான எல்லாவற்றையும் செய்த பின்னும் மழை ஏற்படாமல் போகவும் வாய்ப்புகள் உண்டு.
இயற்கை மழை
இவ்வளவு பணத்தை செயற்கை மழைக்காக செலவிடுவதை விட மரம், செடி, கொடிகளை வளர்த்து நகர்புறம் வெப்பமயமாதலைத் தடுத்து இயற்கை வழிகளில் மழையைப் பெறத் தேவையான திட்டங்களை வகுப்பதே ஆகச் சிறந்தது.
செயற்கை மழை என்பது இன்னொரு ஊருக்கு செல்லும் மழையை ஆகாயத்தில் வழிமறைத்து திருடிக்கொள்ளவதே இதன் உண்மையான நிலை.
பக்கத்து ஊரிலோ அல்லது பக்கத்து மாநிலத்திலோ பெய்ய வேண்டிய மழை இதனால் பொய்த்துப்போக வாய்ப்புகள் அதிகம்.
அதே நேரம் செயற்கை மழைபோக இயற்கை மழையும் அங்கு அதிக அளவில் பெய்தால் அந்த மாநிலம் வெள்ளப்பெருக்கில் அழிவதும் சாத்தியம்.