Home நிகழ்வுகள் இந்தியா வட இந்தியாவில் தொடர்ந்து பயிர்களை நாசம் செய்யும் பாலைவன வெட்டுகிளிகள்

வட இந்தியாவில் தொடர்ந்து பயிர்களை நாசம் செய்யும் பாலைவன வெட்டுகிளிகள்

பயிர்களை நாசம் செய்யும் பாலைவன வெட்டுகிளிகள்

புதுடெல்லி: வெட்டுகிளிகளின் படை குர்கான் பகுதியில் உள்ள பயிர்களை சனிக்கிழமை நாசம் செய்தது. நகராட்சி நிர்வாகம் வெள்ளிக்கிழமை “பயிர்களை நாசம் செய்யும் பாலைவன வெட்டுகிளிகள் தாக்கக்கூடும்” என மஹேந்திரகார்க் என்ற மாவட்டத்தில் வெட்டுகிளிகளை பார்த்த பின் எச்சரிக்கை விடுத்திருந்தது.

அதிக ஒலி எழுப்பும் வகையில் பாத்திரங்களை வைத்து கொள்ளுங்கள்

விட்டின் ஜென்னல்கள் மற்றும் கதவுகளை மூடவும் மற்றும் வெட்டுகிளிகள் தாக்கினால் அதிக ஒலி எழுப்பும் வகையில் பாத்திரங்களை வைத்து கொள்ளுமாறு நிர்வாகிகள் அறிவுறுத்தினர்.

இந்தியா வரலாற்றில் இல்லாத அளவிற்கு மோசமான வெட்டுகிளி தாக்குதல்களை தற்போது எதிர்கொண்டு வருகிறது. இந்தியாவில் மத்திய மற்றும் மேற்கு மாநிலங்களான குஜராத், மராட்டியம், உத்திர பிரதேசம், ராஜஸ்தான், பஞ்சாப் மற்றும் ஹரியானா ஆகிய பகுதிகளை இது பாதித்து வருகின்றன.

60 புதிய பூச்சிக்கொல்லி தெளிப்பான்களை வாங்க உத்தரவு

இந்தியா தற்போது ஐந்து மாவட்டங்களில் உள்ள 399 இடங்களில் வெட்டுகிளி தாக்குதல்களை கட்டுபடுத்தி உள்ளது மற்றும் 60 புதிய பூச்சிக்கொல்லி தெளிப்பான்களை வாங்க உத்தரவு பிறப்பித்து உள்ளது.

55,542 ஹெக்டேரில் பயிர்களுக்கு பூச்சிக்கொல்லி தெளிக்கப்பட்டது

அதிகாரிகள் தீ அனைப்பு படை மற்றும் சிறப்பு வாகனங்களை பயண்படுத்தி 55,542 ஹெக்டேர் அளவிலான பயிர்களுக்கு மேற்கு மற்றும் மத்திய மாநிலங்களான குஜராத், ராஜஸ்தான் மற்றும் மராட்டியம், மத்திய பிரதேசம் மற்றும் பஞ்சாப், ஹரியானா மற்றும் உத்திர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இந்த பூச்சிக்கொல்லியை தெளித்துள்ளனர்.

Previous articleவிஷாலின் சக்ரா ஓடிடி தளத்தில் வெளியீடு?
Next articleகுடும்பப்பாங்காக நடித்த அனு இம்மானுவேல் கவர்ச்சி புகைப்படங்கள் சமூக வளைதளங்கலில் திடீர் வைரல்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here