கல்யாணம்: கொரோனா தொற்றுடன் சென்ற நபர்: சானிடைஸருடன் வந்த விழிப்புணர்வு ஏற்படுத்திய ஸ்டாலின். இந்த நேரத்தில் விழிப்புணர்வுடன் செயல்படுவது அவசியம்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனாவைரஸ் உறுதிப்படுத்தப்பட்ட நபர் ரயில் பயணம் செய்து கல்யாண விருந்து சாப்பிட்டு வந்து இருக்கிறாராம்.
மும்பை கல்யானில் வசிக்கும் கான்ஜி. இவர் மார்ச் 6-ஆம் தேதி அமெரிக்காவில் இருந்து வந்துள்ளார். வந்த உடனேயே நன்றாக ஊர் சுற்றியுள்ளார்.
ஹுடாட்மா ரயிலில், பயணம் செய்து சோலாப்பூரில் பகுதியில் நடந்த திருமண நிகழ்விலும் பங்கேற்று கறிசோறு சாப்பிட்டுள்ளார்.
அன்றைய நாளில் மட்டும் குறைந்தது 1000 பேருக்காவது கொரோனா தொற்று ஏற்பட்டிருக்க வாய்ப்பு இருக்கிறது என அதிகாரிகள் கருதுகின்றனர்.
எனினும் இவர் எத்தனை பேருடன் தொடர்பில் இருந்தார் என்பது முழுமையாக தெரியவில்லை. கான்ஜிக்கு கொரோனாவைரஸ் இருப்பது சில தினங்கள் முன்பு தான் தெரிய வந்தது.
மேலும் அவரது மனைவி மற்றும் குழந்தை ஆகிய இருவருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மும்பையில் கரோனா வேகமாக பரவி வரும் காரணம் அங்குள்ள அரசு மிகவும் அஜாக்ரதையாக நடந்துகொண்டது தான்.
பெங்களூரு ஐடி ஊழியர் மனைவி கொரோனாவுடன் பெங்களூருவில் இருந்து மும்பை விமான நிலையம் சென்று அங்கிருந்து டெல்லி சென்றுள்ளார்.
அதுவரை விமான நிலைய ஊழியர்கள் அவருக்கு கொரோனா இருப்பதை கண்டுபிடிக்காமல் பயணம் செய்ய அனுமதித்து உள்ளனர்.
இதன் காரணமாகவே பெங்களூரு மும்பை பகுதியில் கொரோனா தீவிரமாக பரவி வருகிறது. மக்கள் கவனக்குறைவால், அறிமையால், சுயநலத்தால் மற்றவர்களுக்கு பரப்பிவிட்டு வருகின்றனர்.
ஸ்டாலின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை
மு.க.ஸ்டாலின் அவர்கள் வேலூர் மேற்கு மாவட்ட கழகப் பொருளாளர் திரு.அருணகிரி அவர்களின் மகளும் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.அ.நல்லதம்பி MLA அவர்களின் அண்ணன் மகளுமான செல்வி அஸ்வினி – செல்வன் திவாகர் ஆகியோர் திருமண வரவேற்பு விழாவில் பங்கேற்றார்.
அப்போது மணமக்களுக்கு மாஸ்க், சானிடைசர் ஆகியவற்றை வழங்கினார். மேலும் திருமண நிகழ்ச்சிக்கு வந்தவர்களுக்கு சானிடைசர் கொடுக்கப்பட்டு உள்ளது.
இங்கெல்லாம் கொரோனா வருமா என மெத்தனமாக இல்லாமல் வருபவர்களுக்கு சானிடைசர் கொடுத்து திமுகவினர் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளனர்.
இது உண்மையில் பாராட்டக்கூடிய விஷயம். இதை அனைத்து பிரபலங்கள், கட்சிதலைவர்கள் மற்றும் பொதுமக்கள் பின்பற்ற வேண்டும்.
கல்யாணம், திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு பன்னீர் தெளித்து வரவேற்பதற்கு பதில் சானிடைசர் கொண்டு கைகளை சுத்தம் செய்து வரவேற்பது ஆரோக்கியமான விஷயம்.