விசாகப்பட்டிணம் எல் ஜி பாலிமர்ஸ் ஆலையில் ஸ்டிரீன்(styrene) என்னும் விச வாயு கசிவு ஆலையை சுற்றி 3 கி.மீ தூர சுற்றளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால் குறைந்தபட்சம் 5 கிராமங்களாவது பாதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இதுவரை 5 பேர் பலி
ஹிந்துஸ்தான் பாலிமர்ஸில் இருந்து விசவாயு கசிந்ததை அடுத்து இதுவரை ஒரு பெண் குழந்தை உட்பட 5 பேர் இறந்துள்ளனர், மற்றவர்கள் கோபாலபட்னத்தில் உள்ள 30 படுக்கைகள் வசதியுடைய அரசு மருத்துவமனையிலும் மற்றும் கிங் ஜியோர்ஜ் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
இறப்பு எண்ணிக்கையை ஆந்திரா மருத்துவ கல்லூரியின் தலைமை ஆசிரிசியர் சுதாகர் மற்றும் விசாகப்பட்டிணம் மாநகராட்சி ஆனையர் எஸ். ஸ்ரீஜனா ஆகியோரால் உறுதி செய்யப்பட்டது. மேலும் தலைமை ஆசிரியர் சுதாகர் தெரிவிக்கையில் இறப்பு எண்ணிக்கையில் அதிகரிக்க வாய்புள்ளதாகவும், ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையை ஆராய்ந்து வருவதாகவும் தெரிவித்தார்.
ஆலையை சுற்றி 5 கிராமங்கள் பாதிப்பு
எல் ஜி பாலிமர்ஸ் ஆலையில் அதிகாலை 2.30 மணி முதல் 3.00 மணி அளவில் இந்த விசவாயுக்கசிவு ஏற்பட்டதாகவும் மேலும் 3 கி.மீ அளவு சுற்றளவுக்கு இந்த வாயு பரவி ஆர்.ஆர். வெங்கடபுரம், பத்மபுரம், பி.சி காலணி மற்றும் கம்பரபலம் ஆகிய கிராமங்கள் உட்பட 5 கிராமங்கள் வரை பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
காவல் துறை ஆணையர் ராஜீவ் குமார் மீனா மேலும் தெரிவிக்கையில் 100 முதல் 200 நபர்கள் வரை மூச்சி திணரல் ஏற்பட்டதால் கிங் ஜியோர்ஜ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்தார்.
நரம்பு மண்டலத்தை பாதிக்கும்
அங்கு வந்த செய்தியாளர்கள் சிலர் தெரிவிக்கையில் கசிந்த ஸ்டிரீன்(styrene)வாயுவானது நரம்பு மண்டலத்தை பாதிக்கும் விசவாயு எனவும் இதை சுவாசித்தால் பத்து நிமிடத்தில் சுயநினைவை இழத்தல் மற்றும் இறப்பு ஏற்பட வாய்பு உள்ளது எனவும் தெரிவித்தனர்.