சினிமாவில் பிரபல கிரிக்கெட் வீரர் தோனியாக நடித்து புகழ் பெற்ற, ‘தோனி’ திரைப்படத்தின் கதாநாயகன் ‘சுஷாந்த்‘ தற்கொலை செய்து கொண்டார். இந்த செய்தி கிரிக்கெட் இரசிகர்கள் மற்றும் திரைத்துறையினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
‘தோனி’ திரைப்படத்தின் கதாநாயகன் ‘சுஷாந்த்’
34 வயதாகும் சுஷாந்த், கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுத்த ‘தோனி’ திரைப்படத்தில் இந்திய கிரிக்கெட் வீரர் தோனி கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருந்ததன் மூலம் பெரிய அளவில் பிரபலமடைந்தார்.
மும்பையில் தனது வீட்டில் தற்கொலை
பீகாரில் பிறந்த இவரது இயற்பெயர் ‘சுஷாந்த் சிங்க் ராஜ்புட்’ ஆகும். மும்பையில் வசித்துவந்துள்ள நிலையில் ஞாயிற்றுக்கிழமை தனது வீட்டிலேயே தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
பாலிவுட்டின் கமர்ஷியல் வெற்றி படங்களில் நடித்தவர்
பாலிவுட்டில் 2013இல் நடிகனாக தனது வாழ்க்கையை துவங்கியவர் சுஷாந்த் என்ற ‘ரீல்’ தோனி. சுஷாந்த் பாலிவுட்டில் பலவிதமான கமர்ஷியல் வெற்றி படங்களில் கதானாயகனாக நடித்துள்ளார்.
பிரபலங்கள் மற்றும் இரசிகர்கள் இரங்கல்
இவரது இறப்பிற்கு இரசிகர்கள் மற்றும் பாலிவுட் பிரபலங்கள், சச்சின், அஸ்வின், இர்பான் பதான், சுரேஷ் ரெய்னா போன்ற கிரிக்கெட் வீரர்களும் இரங்கல் தெரிவித்தபடி உள்ளனர்.
கிரிக்கெட் வீரர் தோனியின் இரசிகர்கள் மத்தியில் இவரது இறப்பு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தோனி போன்ற தன்னம்பிக்கை மிகுந்த கதாபாத்திரத்தில் நடித்த இவரது இந்த முடிவு நம்பமுடியாதது போல் உள்ளது.