தம்பிக்கு கைகொடுத்த அண்ணன்: முகேஷ் & அனில் அம்பானி
கடைசி நேரத்தில் உதவுவதற்கு யாரும் இல்லாத நேரத்தில் தானாக முன்வந்து தம்பியை காப்பாற்றிய முகேஷ் அம்பானி. இன்றைக்குள் பணத்தை செலுத்தாமல் இருந்திருந்தால் அனில் அம்பானி ஜெயிலுக்கு போக வேண்டியதுதான்.
கடந்த 2014ஆம் ஆண்டு ஸ்வீடன் நாட்டு தொலைத் தொடர்பு நிறுவனமான எரிக்சனுடன் ரிலையன்ஸ் நிறுவனம் 7 வருடம் ஒப்பந்தம் செய்திருந்தது.
எரிக்சன் நிறுவனம் தொலைதொடர்பு கருவிகள், சேவைகள் மற்றும் தொழில்நுட்பங்களை கொண்டதாகும்.
எரிக்சன் நிறுவனத்திற்கு ரிலையன்ஸ் நிறுவனம் 1500 கோடி கடன் அளிக்க வேண்டி இருந்தது. ஏற்கனவே ரிலையன்ஸ் நிறுவனம் 45000 கோடிக்கு மேல் கடனில் தான் சென்றுகொண்டிருக்கிறது.
உச்சநீதிமன்றத்தின் அறிவுரையின்படி, ரூ.550 கோடி பெற்றுக்கொள்ள எரிக்ஸன் நிறுவனம் சம்மதித்தது.
கடந்த ஆண்டு மே மாதம் உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் ரூ.550 கோடியை வழங்க ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு 120 நாட்கள் கால அவகாசத்தை அளித்தது.
ஆனால் தேதி முடிந்தும் ரிலையன்ஸ் நிறுவனம் பணத்தை செலுத்தாததால் எரிக்சன் நிறுவனம் ரிலையன்ஸ் மீது அவமதிப்பு வழக்குப் போட்டது.