மும்பை: தாரவியில் உள்ள ஜி-வடக்கு தொகுதியில் சனிக்கிழமை மட்டும் 89 கொரோனா நோயாளிகள் கண்டுபிடிக்கபட்டனர். இந்த பகுதியில் இது ஒருநாளில் ஏற்பட்ட அதிகபட்ச பாதிப்பாகும், வெள்ளிகிழமை இது 38 ஆக இருந்தது. தாராவியில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 496 இதில் 18 உயிர் இழப்புகளும் அடங்கும்.
நெருக்கடி மிக்க பகுதி
ஜி-வடக்கு தொகுதி என்பது தாதர்-மாகிம் மற்றும் தாராவியை உள்ளடக்கிய பகுதி ஆகும். இந்த தொகுதியில் பாதிக்கப்பட்டிருக்கும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 594 ஆகும், இதில் 84% தாராவியின் நெருக்கடி மிக்க பகுதியாக கருதப்படுகிறது. அதிகாரிகள் தாராவி பகுதியில் மட்டும் இத்தனை கொரோனா நோயாளிகள் இருக்க காரணம் என்ன என்று ஆராய்ந்து வருகின்றனர்.
மிகவும் மோசமான ஹாட்ஸ்பாட்
தாராவி மிகமும் மோசமான கொரோனா ஹாட்ஸ்பாட் ஆக கருதப்படுகிறது. இந்த பகுதிமக்களை குணப்படுத்த 4 தனியார் மருத்துவமனைகள் தன்முனைப்பாக முன்வந்துள்ளன. அவை அதிக எண்ணிக்கையிலான காய்சலை கண்டுபிடிக்கும் முகாம்களை கொண்டு இந்த குடிசை பகுதியில் அதிகபட்ச கொரோனா நோயாளிகளை கண்டுபிடிக்கும் முயற்ச்சியில் இறங்கி உள்ளன.
புதன் கிழமை 47 வயதுடைய பிஎம்சி(BMC) மதிப்பீடு ஆய்வாளர், தாராவியில் உணவு வழங்கும் பணியில் ஈடுபட்டிருந்தவர், கோரோனா தொற்றால் உயிரிழந்தார்.
தாராவி என்பது மும்பையில் உள்ள பெரிய குடிசைப்பகுதிகளில் ஒன்றாகும், ஏறத்தாழ 2.1 சதுர கி.மீ பரப்பளவு கொண்ட பகுதி இது. இந்த பகுதியில் சரியான கழிப்பிட வசதிகள் இல்லாததும், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களின் அறிகுறிகளைக்கூட மருத்துவர்களிடம் சொல்ல தயங்குபவர்களாக உள்ளனர்.
பிஎம்சி(BMC) இங்கு கொரோனா பரிசோதனைகளை செய்ய பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அருகில் மருத்துவ முகாம்களை அமைத்து உள்ளது. இங்கு இருந்து கொரோனா தொற்று சோதனைக்கான இரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு உடனடியாக தனியார் சோதனை ஆய்வகங்களுக்கு அனுப்பி வைக்கபடுகின்றன.