மும்பை: 90களில் பிறந்த காவலர், 30வயது ஆகியும் திருமணம் ஆகாத விரக்தியில் கட்டிடத்தின் மீது ஏறி தற்கொலை முயற்ச்சி. சக காவல்துறை நண்பர்கள் நல்ல வார்த்தைகளை கூறி அவரை சமாதானம் செய்தனர்.
30 வயது கடந்தும் திருமணம் ஆகவில்லை
சனிக்கிழமை மதியம் மும்பையின் தாதர் பகுதியில் காவலர் ஒருவர் மூன்று மாடி கட்டிடத்தின் மீது ஏறி தனக்கு 30 வயது கடந்தும் திருமணம் ஆகாததால் குதிக்கப்போவதாக கூறியுள்ளார்.
11:30 மணி அளவில் அந்த காவலர் காவலர் குடியிருப்பின் ஒரு மூன்று மாடி கட்டிடத்தின் மீது ஏறினார்.
மாடியில் மதில் சுவர் மீது ஏறி நடந்தார்
“ மாடியில் மதில் சுவர் மீது ஏறி, தற்கொலைக்கு தயார் ஆனவர் போல் அங்கும் இங்கும் நடந்தார். இதை அருகில் குடியிருந்த நபர் கவனித்து கிழே இறங்கும் படி கூறியுள்ளார், ஆனால் அதை மறுத்த காவலர் ஏதோ முனு முனுத்த படி இருந்துள்ளார்,” என மூத்த காவல் ஆய்வாளர் வினோத் காம்லே கூறியுள்ளார்.
நண்பர்களால் சமாதானப்படுத்தப்பட்டார்
“காவல் துறையினர் மற்றும் தீயனைப்பு துறையினர் அழைத்தும் கீழே இறங்காததால், இறுதியாக அந்த காவலரின் நண்பர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். அவர்களால் சமாதானப்படுத்தப்பட்டு கீழே இறங்கினார்”, என மேலும் அவர் தெரிவித்தார்.