Home நிகழ்வுகள் இந்தியா தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் – பிரதமர் மோடி

தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் – பிரதமர் மோடி

322
0

தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழ் மக்களுக்கு தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் தமிழில் பதிவிட்டுள்ளார் நம் பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள்.

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் காரணமாக உலகமே ஸ்தம்பித்தது. குறிப்பாக அமெரிக்கா, ஸ்பெயின், இத்தாலி, பிரான்ஸ் போன்ற நாடுகள் பெரிதாக பாதிக்கப்பட்டுள்ளன. அதிக இழப்புகளை சந்தித்து வருகின்றன.

இந்தியாவிலும் கொரோனா தொற்று விட்டுவைக்கவில்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

நம் இந்திய பிரதமர் மோடி அவர்கள் 21நாள் ஊரடங்கு உத்தரவை அறிவித்துள்ளார். இதனால் மக்கள் அனைவரும் அத்தியாவசிய தேவைக்காக மட்டுமே வெளியில் வரும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இன்று ஏப்ரல் 14ஆம் தேதி தமிழ் மக்களின் தமிழ் புத்தாண்டு. இதை தமிழ் மக்கள் வருடாவருடம் மிகவும் சிறப்பாகவும் ஒரு திருவிழா கொண்டாடி வருவார்கள்.

தற்போது ஊரடங்கு உத்தரவு இருப்பதால் மக்களால் இந்த புத்தாண்டை கொண்டாட முடியவில்லை.

ஆனால் தொலைபேசி மூலம், சமூகவலைதளங்கள் மூலம் புத்தாண்டு நல்வாழ்த்துக்களை கூறிவருகிறார்கள்.

தற்போது நம் நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் ட்விட்டர் பக்கத்தில் தமிழில் ட்விட் செய்துள்ளார்.

அதில் அவர் “அனைவருக்கும், குறிப்பாக என் தமிழ் சகோதரர் சகோதரிகளுக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். இன்பம் நிறைந்த ஆண்டாக இது அமைந்திட பிரார்த்திக்கிறேன். எதிர்வரும் ஆண்டில் உங்கள் விளைவுகள் யாவும் நிறைவேறடட்டும்.” இன்று பதிவிட்டுள்ளார்.

https://platform.twitter.com/widgets.js

Previous articleசிங்கப்பூரில் கொரோனா விஸ்வரூபம் எடுத்தது ஒரே நாளில் 386 பேர் பாதிப்பு
Next articleகேரளாவின் ராஜா தந்திரம் புதிய கொரோனா பாதிப்பு ஒன்று கூட இல்லை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here