Tamil Rockers: தமிழ் ராக்கர்ஸ் இணையத்தால் அமேசான் நிறுவனத்திற்கு ஆப்பு வைத்த இந்திய அரசு
அமேசான் நிறுவனம் வெறும் ஷாப்பிங் வெப்சைட் மட்டும் நடத்தும் நிறுவனம் அல்ல. வெப்ஹஸ்டிங் உட்பட பல இணையச் சேவைகளையும் வழங்கி வருகிறது.
அமேசான் நிறுவனத்திற்கு சொந்தமானது அலெக்சா.காம் இணையதளம். இந்த இணைய தளம் அனைத்து இணையதளத்திற்கும் ரேங்க் அளித்து வருகிறது.
ஒவ்வொரு இணையதளத்தையும் எத்தனை பேர் பார்க்கின்றனர். எந்த நாட்டில் எத்தனையாவது இடம் பிடித்துள்ளது என துல்லியமாக கணித்துச் சொல்லும்.
இப்படி ஒரு இணையதளம் இந்திய அரசால் இன்று முடக்கப்பட்டு உள்ளது. இப்படி ஒரு நல்ல இணையதளத்தை ஏன் முடக்க வேண்டும் எனக் கேள்வி எழலாம்.
நீண்ட நாட்களாக பைரசி இணையத்தளத்தை முடக்கவேண்டும் எனத் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் குரல் கொடுத்து வருகிறார்.
அரசு உதவி இல்லாமல் இணையத்தளங்களை முடக்க முடியாது என தமிழக அரசு, இந்திய அரசிடம் நேரடியாக புகார் கொடுத்தார்.
இந்நிலையில், இந்திய அரசு சமீப காலமாக இணையப் பைரசி மற்றும் ஆபாச இணையதளங்களுக்கு எதிராக தீவிரமாக நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.
எக்ஸ் இணையதளங்களை இந்தியாவில் பார்க்க முடியாது. பெரிய இணையதளங்கள் முடக்கப்பட்டாலும், சிறிய இணையதளங்கள் வேகமாக முளைத்து வருகிறது. எனவே ஒவ்வொன்றையும் ‘டோட்’ தேடித்தேடி முடிக்க சிரமாகி வருகிறது.
அலெக்சா நிறுவனம் போன்ற சில இணையதளங்களின் புதிய இணைய முகவரியை வெளியிட்டு வருகிறது.
அதாவது அலெக்சா.காம் இணையத்தில் ஆபாச அல்லது பைரசி இணையதளம் பற்றி தேடினால் அந்த இணையதளம் சம்பந்தமான புதிய டொமைன்கள், ரிலேட்டட் டொமைன்களைக் காட்டிவருகிறது.
இந்த இணையதளங்கள் மூலம் பலரும் எளிதாக புதிய இணையத்தளங்களின் முகவரியைப் பெற்றுவிடுகின்றனர்.
இதன் காரணமாகவே அலெக்சா போன்ற பைரசி இணையதள முகவரியை வெளியிடும் பல இணையதளங்களை இந்திய அரசு முடக்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதன் மூலம் அதிக அளவில் பைரசி இணையதளங்களை மக்கள் பார்ப்பதை தடுக்க முடியும் என இந்திய அரசு நம்புகிறது.