இந்தியா: சமூக வலைதளங்களில் “பறவைகளுக்கு உணவளிக்க சபதம் ஏற்போம்” என்ற அர்த்தம் கொண்ட #LetsPledgeToServeBirds என்ற ஆங்கில ஹேஷ்டேக் பரவல் ஆகியுள்ளது.
கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ள நிலையில் மனிதர்களைப்போலவே நாட்டில் வாழும் விலங்குகளும் உணவின்றியும் தண்ணீர் இன்றியும் தவித்து வருகின்றன.
வீட்டில் முடங்கிய மக்கள் சிலர் தங்கள் வீட்டை சுற்றி உள்ள பறவைகளை காப்பதற்காக மொட்டை மாடியில் வேகவைத்த அரிசி, தானியங்களை வைத்தும்
பறவைகளுக்கு தண்ணீர் வைத்தும் காணொளிகளை சமூக வலைதளங்களில் வெளியிட்டு கூடவே “LetsPledgeToServeBirds” என்ற ஹேஷ்டேக்குடன் பகிர்ந்து வருகின்றனர்.
அதில் ஒரு பெண்மணி தன் வீட்டின் முன் கிடந்த பறவைக்கு தண்ணீர் கொடுத்து காப்பாற்றும் காணொளியும் இடம் பெற்றிருந்தது.
வெய்யிலின் தாக்கம் அதிகரித்து வரும் இந்த நிலையில் மக்களின் இத்தகைய செயல்பாடுகள் பறவைகள் வாழ வழிவகுத்தால் இது போன்ற முயற்ச்சிகள் முக்கியத்துவம் பெரும்.
பறவைகளைப் போன்றே நாய்களும் உணவின்றி மனிதர்களை கடிக்கும் சம்பவங்கள் சில இடங்களில் நடந்தேரியுள்ளன.
கொரோனா ஊரடங்கால் மனிதர்கள் நடமாட்டம் குறைந்த நிலையில் தெரு நாய்களும் உணவின்றி தவிக்கின்றன, அதற்கும் இவ்வாறு ஒரு ஹேஷ்டேக் உருவக்கம் பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது போன்று பறவைகளுக்கும் விலங்குகளுக்கும் உணவளிப்பதனால் வீட்டிலேயே முடங்கியிருப்பவர்களுக்கு மன அழுத்தம் குறைவதாகவும் சிலர் தெரிவிக்கின்றனர்.