Home நிகழ்வுகள் இந்தியா பால்கனி இடிந்து விழுந்ததில் இரண்டு சகோதரிகள் பலி: கொல்கத்தா

பால்கனி இடிந்து விழுந்ததில் இரண்டு சகோதரிகள் பலி: கொல்கத்தா

பால்கனி இடிந்து விழுந்ததில் இரண்டு சகோதரிகள் பலி

ஹவுரா: சனிக்கிழமை மாலை பெலூரில் உள்ள கட்டிடத்தின் மூன்றாவது மாடியில் தொங்கிக்கொண்டிருந்த பால்கனி இடிந்து விழுந்ததில் இரண்டு சகோதரிகள் பலி.

இரத்த வெள்ளத்தில் கிடந்தனர்

சம்பவம் நடந்த அன்று இரவு 9 மணி அளவில் அனுராதா சர்மா(40) மற்றும் திபிகா தந்த்(37) ஆகியவர்கள் இடிபாடுகளில் இரத்த வெள்ளத்தில் கிடந்தனர்.

பிறகு இருவரையும் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், சர்மா கொண்டுவரும் பொழுதே இறந்து விட்டதாகவும், தந்த் பலத்த காயங்களுடன் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

புகார் கொடுத்தால் நடவடிக்கை காவல்துறை அறிவிப்பு

பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் புகார் கொடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் தெரிவித்தனர்.

இடிந்த கட்டிடத்தின் உறுதித்தண்மை குறித்து ஆராய ஒரு குழுவை அனுப்பிவைத்துள்ளதாக ஹவுரா நகராட்சியின் ஆணையர் தவால் ஜெயின் தெரிவித்தார். “அக்குழு சமர்பிக்கும் அறிக்கை வந்த பின்பு, நடவடிக்கை தொடங்கப்படும்,” என அவர் தெரிவித்தார்.

Previous articleகேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது: வானிலை ஆய்வு மையம்
Next articleதமிழ்நாட்டில் தொடர்ந்து உச்சத்தில் கொரோனா எண்ணிக்கை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here