Home ஆட்டோமொபைல் பறக்கும் கார்கள்; பற பற பறக்கலாம் இந்தியாவில்!

பறக்கும் கார்கள்; பற பற பறக்கலாம் இந்தியாவில்!

493
0
மும்பை நகரத்தில் uber பறக்கும் கார்கள்

பறக்கும் கார்கள் சேவை விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. மும்பை நகரத்தில் உபர் (uber) நிறுவனம் இந்த சேவையை துவங்க திட்டமிட்டுள்ளது.

அமெரிக்காவின் உபர்

அமெரிக்க நிறுவனமான உபர், வாடகை வாகனங்களை இயக்கும் நிறுவனங்களின் முன்னோடியாக திகழ்கிறது. ‘வாகன அரக்கன்’ என்ற வார்த்தை உபர் நிறுவனத்திற்கு சரியாக பொருந்தும்.

Uber AUTO, UberBOAT, UberGO, UberMOTO, UberTAXI, UberFLASH, UberBike, UberEats, UberAIR என வகைவகையாக சேவையை துவங்கும் இந்நிறுவனம், செயலியை (App) கொண்டு அனைத்தையும் கண்ட்ரோல் செய்கின்றது.

100% ஆட்களே இல்லாமல் செயல்பட ஆளில்லா கார்களை இந்தியாவில் அறிமுகம் செய்தது. ஆனால் இத்திட்டம் தோல்வியில் முடிந்தது. ஆளில்லா கார்களால் அடிக்கடி விபத்துக்கள் நிகழ்ந்ததால் நிறுத்தப்பட்டுவிட்டது.

விரைவில் Uber AIR

இந்நிறுவனம் UberAIR சேவையை மும்பை நகரத்தில் விரைவில் துவங்க உள்ளது. 2020ல் அமெரிக்காவிலும், 2023க்குள் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இந்த சேவையை துவங்க திட்டமிட்டுள்ளது.

மின்சாரம் மூலம் இயங்கும் பறக்கும் கார்கள் மற்றும் குட்டி விமானங்களை கொண்டு சோதனை முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.

இந்தியா போன்ற மக்கள்தொகை பெருகிவரும் நாடுகளில் பறக்கும் கார் மிகமிக அவசியம். சென்னை, மெரினா சாலையில் உள்ள கார் 300 கிலோமீட்டர் வேகத்தில் பறந்து அண்ணாநகரில் தரையிறங்கினால் எப்படியிருக்கும்.

5 நிமிடத்திற்குள் வீட்டிற்கு சென்றுவிடலாம். சென்னையைவிட மும்பை, டெல்லி போன்ற நகரங்களில் மக்கள்தொகை பெருக்கம் அதிகம். அங்கு இச்சேவை வெற்றிகரமாக செயல்பாட்டிற்கு வந்தபின்பு, சென்னையை எட்டி பார்க்கும்.

2025-க்குள் சொந்தமாக பறக்கும் கார்கள் வைத்திருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. பற பற வானம் தொட்டு பறக்கலாம் இந்தியாவில்…

Previous articleஉலகின் நீளமான கடற்கரைகள் பட்டியலில் மெரினா இல்லை!
Next articleஅ இலை இருந்தால் உலகமே தமிழர் கையில் அகப்படும்!
Editor in Chief & Founder of MrPuyal.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here