Home நிகழ்வுகள் இந்தியா லொள்ளு சபா: இந்த காமெடிய மட்டும் மிஸ் பண்ணிடாதீங்க

லொள்ளு சபா: இந்த காமெடிய மட்டும் மிஸ் பண்ணிடாதீங்க

1199
0

12 வருடங்களுக்கு முன்பு மிகவும் பிரபலமான காமெடி ஷோ தான் லொள்ளு சபா. இந்த நிகழ்ச்சியை மீண்டும் விஜய் டிவி ஒளிபரப்பு செய்ய உள்ளது

அன்று விஜய் டிவியை மக்கள் பார்ப்பதற்கு மர்மதேசம், மாயா மச்சீந்திரா, லொள்ளு சபா போன்ற தொடர் மற்றும் நிகழ்ச்சிகளை காரணம்.

அதிலும் ஒரு படத்தை எடுத்து அதிலுள்ள சீன்களையும் கலாய்த்து மக்களிடம் மிகவும் பிரபலம் பெற்றது.

ஈஸ்டர், லொள்ளு சபா மனோகர், சந்தான,ம் ஜீவா போன்றவர்கள் இந்த நிகழ்ச்சியின் மூலம் தான் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தார்கள்.

பின்பு சந்தானம் மிகப் பெரிய நடிகராக உருவெடுத்தார். அதற்கு அடுத்து வந்த ஜீவாவும் சில படங்களில் காமெடியனாக நடித்தார்.

லொள்ளு சபா மனோகர் இன்றும் மக்களிடையே மிகவும் பிரபலமானவர். சில திரைப்படங்களில் நடித்துள்ளார்.

லொள்ளு சபா வீடியோக்கள் யூட்யூபில் அதிகம் பார்வையாளர்களைக் கடந்தது. இன்றுவரை மன உளைச்சலில் இருப்பவர்கள் இந்த நிகழ்ச்சியை பார்த்து சிரித்துக் கொள்வார்கள்.

இதனாலேயே லொள்ளு சபாவின் யூடியூப் வீடியோக்கள் அதிக பார்வையாளர்களை கடந்து உள்ளது.

இருந்தும் அதில் ஹை குவாலிட்டி வீடியோக்கள் கிடைப்பதில்லை. இது விஜய் டிவில் மட்டுமே உள்ளது.

90களில் பிறந்தவர்கள் லொள்ளு சபாவை மீண்டும் ஒளிபரப்ப மாட்டார்களா? என்ற ஏக்கமும் இன்றளவும் இருந்துவருகிறது.

கொரோனா வைரஸ் காரணமாக தற்போது 21 நாள் ஊரடங்கு உத்தரவு இந்திய மக்கள் இருந்து வருகிறார்கள்.

தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் மக்கள் விருப்பத்திற்கு ஏற்றது போல் மகாபாரதம் ,சக்திமான் போன்ற தொடர்களை மீண்டும் ஒளிபரப்ப தொடங்கிவிட்டார்கள்.

தற்போது விஜய் டிவியிலிருந்து ஒரு நல்ல செய்தி 90 கிட்ஸ்க்கு வந்து இருக்கு. லொள்ளு சபா நிகழ்ச்சியை மீண்டும் விஜய் டிவியில் ஒளிபரப்பாக போகிறது.

2000 ஆண்டுக்கு பிறகு பிறந்தவர்கள் இந்த நிகழ்ச்சியை யூடியூபில் மட்டுமே பார்த்து கண்டு சிரித்து ரசித்து மகிழ்ந்தார்கள்.

தற்போது அவர்களும் இந்த நிகழ்ச்சியை விஜய் டிவியில் பார்க்கப் போகிறார்கள். வருகிற சனிக்கிழமை மதியம் 3.30 மணிக்கு ஒளிபரப்பு செய்ய உள்ளது விஜய் டிவி.

இந்த செய்தி கேட்டவுடன் லொள்ளு சபா ரசிகர்கள் சனிக்கிழமை எதிர்நோக்கி உள்ளனர்.

Previous articleDhauladhar range; ஊரடங்கால் உயிர்பெறும் இயற்கை; இங்கே காணுங்கள் இயற்கை பேரழகை
Next articleதாஜ் ஹோட்டல் மருத்துவ ஊழியர்களுக்கு உதவிக்கரம் நீட்டியது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here