திருடிய பொருட்களுடன் டிக்டாக்கில் ஆட்டம் போட்ட பெண் ஒருவரை போலீசார் தேடிவருகின்றனர். அந்த பெண்ணின் டிக்டாக் கணக்கை முடக்கி போலீசார் அவரை தேடிவருகின்றனர்.
அசாம்: டிக்-டாக் செயலி தொடர்ந்து பல சர்ச்சையான பதிவுகள், சட்டவிரோத பதிவுகள் என போலீசாருக்கு பெரும் சவாலாகவே இருந்துவருகிறது. இந்த செயலியை கோடிக்கணக்கானோர் பதிவிறக்கம் செய்து பயன்படுத்துகின்றனர்.
அசாம் மாநிலம் கவுஹாத்தியில் ஒரு வயதான பெண்ணை கவனித்துக்கொள்வதற்காக சுமி கலித்தா என்ற பெண்ணை ஒரு தொண்டு நிறுவனத்தின் மூலம் வேலைக்கு சேர்த்துள்ளனர்.
அந்த பெண் டிக்டாக்கில் அதிக ஆர்வம் கொண்டவர். டிக்டாக்கில் அதிக லைக்குகளை அள்ளும் ஆர்வத்தில் தான் வேலை செய்யும் வீட்டில் பொருட்களை திருடி வீடியோ பதிவிட்டுள்ளார்.
அந்த வீட்டில் இருந்த விலையுயர்ந்த வாட்ச் மற்றும் ஆடைகளை எடுத்துக்கொண்டு லக்கிம்பூரில் உள்ள அவரது ஊருக்கு சென்றுள்ளார். இதன்பின்னர் அந்த பெண்ணை காணவில்லை என தேடியுள்ளனர்.
ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியாததால் அந்த பெண்னை தேடுவதை நிறுத்தி விட்டனர். இந்நிலையில் சமீபத்தில் அந்த பெண் காணாமல் போன நகைகளுடன் டிக்டாக்கில் வீடியோ பதிவிட்டுள்ளார்.
இதனை கண்டு பாதிக்கப்பட்டவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதன்பிறகு தனது பெயரை அனாமிகா என மாற்றி வீடியோக்களை பதிவிட்டு வந்துள்ளார்.
இதனால் பாதிக்கப்பட்டவர்கள் அந்த பெண் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். தற்போது போலீசார் அந்த பெண்ணின் டிக்டாக் கணக்கை வைத்து அவரை தேடிவருகின்றனர்.