கர்னல் போர்; வரலாற்றில் இன்று பிப்ரவரி 24, நாதிர் சா மற்றும் மொஹம்மது சா பேச்சுவார்த்தை, இன்றைய நாள் சிறப்பு. today what special day in world – india – tamil.
1739-ஆம் ஆண்டு பிப்ரவரி 24-ஆம் நாள் பெர்சியா நாட்டின் மன்னன் நாதிர் சா இந்தியாவின் வடக்கில் இருக்கும் கர்னல் என்ற இடத்தில் மோகலாய மன்னன் மொஹம்மத் சாவின் படையை துவம்சம் செய்த நாள்.
நாதிர் சா கிழக்கு ஆப்கானிஸ்தான் அதனை சுற்றிய பகுதிகளை கைப்பற்றிய பிறகு தன் படையை டெல்லியை நோக்கி அனுப்பினான்.
மோகலாயர்களை விட எண்ணிக்கையில் குறைவாக இருந்தாலும் பெர்சியா படைகள் மிகுந்த திறன் வாய்ந்ததாகவும் பலமாகவும் இருந்தது.
கர்னல் என்ற இடத்தில் இரு படைகளும் மோதியதில் வெறும் மூன்று மணி நேரத்தில் மோகலையா படையை வீழ்த்தி நிலைகுலைந்தனர்.
நாதிர் சா மற்றும் மொஹம்மது சா பேச்சுவார்த்தை
மோகலாய வீழ்ச்சிக்கு பிறகு தங்களுக்குள் நிலங்களை பகிர்ந்து கொள்வது பற்றி இரு மன்னர்களும் பேச்சுவார்த்தை நடத்தினர். நாதிர் சா எளிதில் சம்மதிக்கவில்லை.
தலைநகர் டெல்லியில் பெர்சியா படைகள் புகுந்து அனைத்து பொன் பொருட்களை கொள்ளையடித்து ஊரையும் நாசம் செய்தது.
பிறகு மொஹம்மது ஒரு பெரிய இழப்பீடு தொகையை கொடுத்து நிலங்களை பிரித்துக்கொண்டனர்.
இப்போரில் 30000-க்கும் மேற்பட்டோர் உயிரழந்தனர். இந்தியாவில் மோகலாய பேரரசர்களின் ஆதிக்கம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வந்த காலம் அது.
வரலாற்றில் இன்று. today what special day in world. இந்த தலைப்புகளில் தொடர்ந்து ஒவ்வொரு நாளின் சிறப்புகளைப் பற்றி எழுதி வருகிறோம்.
அக்கட்டுரைகளைப் படித்து அன்றைய நாளின் சிறப்புகள் என்ன என்பதைப் பற்றியும், அது ஏன் உருவானது? எதற்காக கொண்டாடப்படுகிறது என்ற வரலாறு பற்றியும் தெரிந்து கொள்ளுங்கள்.