Home அறிவியல் Super Pink Moon “சூப்பர் பிங்க் நிலா” பற்றி தெரிந்து கொள்வோம்

Super Pink Moon “சூப்பர் பிங்க் நிலா” பற்றி தெரிந்து கொள்வோம்

1698
0

Super Pink Moon: இந்திய மக்கள் இன்று காலை 8.05 மணிக்கு நிலாவை வெறும் கண்களிலேயே பார்க்கலாம் பூமிக்கு சுற்றுவட்டப்பாதையில் மிக அருகில் வரும் நிலாவை பெரிதாக காணலாம்.

வழக்கம்போல் உள்ள பௌர்ணமி விட ஏப்ரல் மாதம் வரும் பௌர்ணமி மிகவும் பெரியதாகவும், சற்று பிரகாசமாகவும் இருக்கும்.

இதை பிங்க் நிலா என்று அழைப்பார்கள். பிங்க் நிலா என்றால் பிங்க் நிறத்தில் நிலா இருக்கும் என்று அர்த்தமில்லை.

“wild ground phlox” என்ற பூக்கள் இந்த வசந்த காலத்தில் முதன்முதலில் பூக்கத் தொடங்கும் காலம் என்பதால் இதை அமெரிக்க பழங்குடியினர் பிங்க் நிலா என்று அழைக்கின்றனர்.

பூமிக்கு மிக அருகில் தனது சுற்றுவட்டப் பாதைகள் நிலா வருவதால் இப்படி பெரிதாக தெரியும். Super Pink Moon எனவே இதற்கு சூப்பர் பிங்க் மூன் என்று பெயர்.

நம் பூமியின் வளிமண்டலத்தில் மாசு, தூசி எதுவும் இல்லாமலிருந்தால் நிலவின் நிறத்தில் எந்த ஒரு மாற்றமும் இருக்காது. இதை மக்கள் வெறும் கண்களிலேயே பார்க்கலாம்.

இந்திய நேரப்படி ஏப்ரல் 7 ஆம் தேதி மாலை 4.30 மணிக்கு தொடங்கும். இன்றிலிருந்து நாம் சமூக வலைதளமான பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற பக்கங்களில் இந்த பிங்க் நிலா புகைப்படத்தை காணலாம்.

இதைத்தான் நாம் சித்ராபவுர்ணமி என்று அழைக்கின்றோம். இந்தியாவில் உள்ள மக்களின் இந்திய நேரப்படி ஏப்ரல் 8ம் தேதி காலை 8.05 மணியிலிருந்து இந்த பிங்க் நிலாவை பார்க்க முடியும்.

சூப்பர் பிளாட் ஊல்ப் மூன் பற்றி தெரியுமா?……… சூப்பர் வோர்ம் மூன் பற்றி தெரியுமா?

Previous articleபணத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஆஸி. வீரர்கள் – மைக்கேல் கிளார்க்
Next articleஅச்சச்சோ! மிரண்டுபோன லோகேஷ் – அப்படி என்ன நடந்தது?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here