Home Latest News Tamil சென்னையில் இருந்து கோவை வந்த 30 ஊழியர்களை பரிசோதனையின்றி பணியில் சேர்த்ததால் ஜுவல்லரிக்கு சீல்:...

சென்னையில் இருந்து கோவை வந்த 30 ஊழியர்களை பரிசோதனையின்றி பணியில் சேர்த்ததால் ஜுவல்லரிக்கு சீல்: கோவை

கோவை வந்த 30

கோவை: கோவையில் கிராஸ்கட் சாலையில் உள்ள ஜுவல்லரி கடை சனிக்கிழமை சீல் வைக்கப்பட்டது. வியாழன் சென்னையில் இருந்து அனுமதியின்றி கோவை வந்த 30 ஊழியர்கள் வெள்ளிக்கிழமை அந்த கடையில் வேலைக்கு அமர்த்தப்பட்டதால் நடவடிக்கை.

சென்னையில் இருந்து வந்த வேலை ஆட்கள்

அந்த குறிப்பிட்ட ஜுவல்லரி நிர்வாகம் சென்னையில் இருந்து வந்த வேலை ஆட்களை 14 நாட்கள் தனிமை படுத்தவில்லை மற்றும் அவர்களின் வருகை குறித்து சுகாதாரத்துறைக்கு எந்த தகவலும் தெரிவிக்கவில்லை.

கொரோனா பரிசோதனை செய்யாமல் வேலையில் அமர்த்தப்பட்டனர்

அந்த வேலை ஆட்கள் தனியார் விடுதியில் தங்கவைக்கப்பட்டு இருந்தனர். “அந்த பகுதியில் இருந்த ஒருவரால் சென்னையில் இருந்து 30 பேர் வந்து கொரோனா பரிசோதனை செய்யப்படாமல் மறு நாளே வேலையில் அமர்த்தப்பட்ட தகவலை கொடுக்கப்பட்டது,” என வட்டாச்சியர் மகேஷ் குமார் தெரிவித்தார்.

சனிக்கிழமை கட்டிடத்திற்கு சீல் வைத்த அதிகாரிகள்

சனிக்கிழமை அதிகாரிகள் வந்த பொழுது அந்த கட்டிடத்தில் சென்னையிலிருந்து வந்த 30 பேரும் வேலையில் இருந்ததால் உடனடியாக ஜிவல்லரி இருந்த கட்டிடத்தை சீல் வைத்தனர் மற்றும் அனைத்து வேலை ஆட்களையும் பரிசோதனை செய்ய துவங்கினர்.

எப்படி கோவை வந்தனர் என்பது குறித்து அதிகாரிகள் கண்டுபிடித்து

அந்த 30 பேரும் சென்னையில் இருந்து எல்லைகளில் யாரிடமும் சிக்காமல் எப்படி கோவை வந்தனர் என்பது குறித்து அதிகாரிகள் கண்டுபிடித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here