Home நிகழ்வுகள் தமிழகம் வடக்கூரானே வெளியேறு: அசுரன் பட பாணியில் மிரள வைத்த கட்சி

வடக்கூரானே வெளியேறு: அசுரன் பட பாணியில் மிரள வைத்த கட்சி

430
0
வடக்கூரானே வெளியேறு

வடக்கூரானே வெளியேறு; அசுரன் பட பாணியில் மிரள வைத்த கட்சி. தமிழ் தேசிய கட்சி என்ற பெயரில் மார்வாடிகளை அதிர வைத்த சம்பவம் ஈரோடு பகுதியில் நடந்துள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் கொங்கலமங்கலம் வீதியில் சில வட மாநிலத்தவர்கள் வணிக வியாபாரம் செய்து வருகின்றனர். அவர்கள் கடைகளில் நிறைய தமிழர்கள் கூலி வேலை பார்த்து வருகின்றனர்.

அதே வீதியில் செயல்பட்டு வரும் பவன் ஸ்டேஷனரீஸ் என்ற கடையிலும், ஜின்னா வீதியில் உள்ள கிருஷ்ணா மெட்டல் கடைகள் உட்பட மூன்று கடைகளின் முன்பும் பிளக்ஸ் பேனர் தொங்க விடப்பட்டு இருந்தது.

அதைக் கண்ட உரிமையாளர்கள் தமிழில் எழுதப்பட்டு இருந்ததால் என்ன என்று புரியாமல் அவற்றை அப்புறப்படுத்தி விட்டு, கடையை திறக்க முயன்றனர்.

ஆனால், கடையில் புதிதாக பூட்டுபோடப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த ஈரோடு டவுன் போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.

போலீஸ் வந்த பிறகு என்ன நடந்து என்று பார்த்து விட்டு மார்வாடியிடம் தகவல் கூறினர். பின்பு இதற்கு காரணம் யார் என விசாரித்து வருகின்றனர்.

வடக்கூரானே வெளியேறு

வடக்கானே வெளியேறு”தமிழர்களின் வாழ்வுரிமையை பறிக்கும் வெளிமாநில மார்வாடிகளின் வணிக நிறுவனங்களை பூட்டுவோம்.

மார்வாடியே வெளியேறு, வடநாட்டவனே வெளியேறு, வடக்கூரானே வெளியேறு. வெளியேற மறுத்தால் புரட்சி வெடிக்கும்”

போன்ற வாசகத்துடன் அந்த பேனரில் தமிழ் தேசிய கட்சி-தமிழர் நாடு என்று அச்சடிக்கப்பட்டு இருந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here