Home நிகழ்வுகள் தமிழகம் கொரோனாவிற்கு 18 மாத குழந்தை உயிரிழப்பு

கொரோனாவிற்கு 18 மாத குழந்தை உயிரிழப்பு

312
0
கொரோனாவிற்கு 18 மாத குழந்தை உயிரிழப்பு

கொரோனாவிற்கு 18 மாத குழந்தை உயிரிழப்பு. விழுப்புரத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு 18 மாத குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம்: நேற்று விழுப்புரம் மாவட்டம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா தொற்றுக்குக்கு 18 மாத ஆண் குழந்தை உள்ளிட்ட 2 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த மாவட்டத்தில் இதுவரை கொரோனா பாதிப்பிற்கு பலியானவர்கள் எண்ணிக்கை 16 -ஆக உயர்ந்துள்ளது. 18 மாத குழந்தை ஒன்று கொரோனா தொற்றுக்கு பலியாகியுள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே உள்ள நீர்பெருந்தகரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பழனி. இவரது மகன் (18 மாதங்கள்) ஹேமந்த் உடல்நலக்குறைவு காரணமாக முண்டியம்பாக்கத்தில் உள்ள விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 26. 6 .2020 ஆம் தேதி அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதன்பிறகு குழந்தைக்கு கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சொத்தை முடிவுகள் வருவதற்குள் குழந்தை நேற்றிரவு இறந்துவிட்டது. இதன்பின்னர் குழந்தையின் உடலை பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

அவர்கள் சொந்த ஊர்க்கு சென்று குழந்தையின் உடலை எரித்து விட்டனர். இதன் பின்னர் தான் கொரோனா பரிசோதை முடிவு பாசிடிவ் என்று வந்துள்ளது. தற்போது குழந்தையின் பெற்றோர் உறவினர்களுக்கு கொரோனா பரிசோதை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Previous articleபீட்டர் பாலின் மீது முதல் மனைவி புகார்: அதிர்ச்சியில் வனிதா!
Next articleதயாரிப்பாளர் தனஞ்செயனின் சகோதரர் கொரோனாவால் பலி!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here