Home நிகழ்வுகள் தமிழகம் தழிழ்நாட்டின் கொரோனா தொற்று எண்ணிக்கை 1 இலட்சத்தை கடந்தது: சென்னை

தழிழ்நாட்டின் கொரோனா தொற்று எண்ணிக்கை 1 இலட்சத்தை கடந்தது: சென்னை

கொரோனா தொற்று எண்ணிக்கை 1 இலட்சத்தை

சென்னை: தமிழ்நாட்டின் முதல் கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டு 118 நாட்கள் கடந்து வெள்ளிக்கிழமை தழிழ்நாட்டின் கொரோனா தொற்று எண்ணிக்கை 1 இலட்சத்தை கடந்தது. வெள்ளிக்கிழமை புதிய கொரோனா தொற்றின் எண்ணிக்கை 4,329 ஆக இருந்தது.

தமிழ்நாட்டின் மொத்த கொரோனா எண்ணிக்கை 1,02,721

தமிழ்நாட்டின் மொத்த கொரோனா எண்ணிக்கை 1,02,721ஐ கடந்தது மற்றும் 42,955 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். குணமடைதல் சதவிகிதம் 57% ஆக உள்ளது.

வெள்ளிகிழமை  64 பேர் கொரோனாவால் இறந்தனர்

இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,385 ஐ தொட்டது. வெள்ளிகிழமை அன்று மட்டும் 64 பேர் கொரோனாவால் இறந்தனர். மராட்டியத்தை அடுத்து 1 இலட்சம் கொரோனா தொற்றுகளை கடந்த இரண்டாவது மாநிலமாக தமிழ்நாடு தற்போது உள்ளது.

வெள்ளிகிழமை சென்னையில் மட்டும் 2,082 புதிய கொரோனா தொற்று

தமிழ்நாட்டில் சென்னை கொரோனாவால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட பகுதியாக உள்ளது. வெள்ளிகிழமை உறுதி செய்யப்பட்ட 2,082 புதிய கொரோனா தொற்றுகளுடன் சேர்த்து மொத்த தொற்று எண்ணிக்கை சென்னையில் 64,689 ஆக உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here