5-8ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து – தமிழக அரசு அறிவிப்பு. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தில் 5-ம் வகுப்பு மற்றும் 8-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடத்தப்படும் என்று இதுவரை அறிவித்து வந்த தமிழக பள்ளிக்கல்வித்துறை இன்று அதிரடியாக அந்த அறிவிப்பை ரத்து செய்தது.
அமைச்சர் செங்கோட்டையன் அறிக்கை
பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று திடீர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் 5, 8-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு உள்ளது பழைய தேர்வு முறையே தொடரும் என்பதாகும்.
பள்ளிக்கல்வித்துறையின் அரசாணை
13.9.2019 அன்று பள்ளிக் கல்வித்துறை சார்பில் அரசாணை ஒன்று வெளியிடப்பட்டது. அதில் மத்திய அரசின் அறிவிப்பை ஏற்றுக்கொண்டு 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டது.
இதற்கு அனைத்து தரப்பிலும் எதிர்ப்புகளும் கடும் விமர்சனங்களும் வந்த வண்ணம் இருந்தது. இருப்பினும் இவற்றையெல்லாம் கண்டுகொள்ளாத தமிழக அரசு வரும் மார்ச் மாதம் தேர்வு தொடங்க விருப்பதாக அறிவிப்பை வெளியிட்டு மேலும் அனைவரையும் அதிர்ச்சியடையச் செய்தது.
பலத்த எதிர்ப்புகள்
தமிழகத்தில் 5ம் வகுப்பு மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என்ற தமிழக அரசின் முடிவிற்கு எதிர்க்கட்சிகளும், கல்வியாளர்களும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
மேலும் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும் என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்தது. எதையும் இதுவரை கண்டுகொள்ளாத அரசு திடீரென இன்று தனது முடிவை திரும்ப பெற்றுள்ளது.
அமைச்சரவைக் கூட்டம்
இந்த சூழ்நிலையில் தமிழ்நாடு அமைச்சரவை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று கூடியது.
இதன்பின்னர் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பத்திரிக்கையாளர்களை சந்தித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
அதில் அவர் கூறியவதாவது, கடந்த செபடம்பர் 13-ம் தேதி வெளியிட்ட அறிக்கையை ரத்து செய்வதாகவும் பழைய முறைப்படியே தேர்வுகள் நடைபெறும் என்பதாகும்.