சென்னை: சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகள் ஊரடங்கால் மக்கள் நடமாட்டம் சிறிதும் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு கொரோனா ஊரடங்கு என்பதால் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன.
அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டும் அனுமதி
பால் வினியோகம், மருந்துவமனை, மருந்துகடை, அவசர ஊர்தி, இறுதி ஊர்வல ஊர்தி போன்றவை மட்டும் அனுமதிக்கப்பட்டன. சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது.
வாடகை மகிழுந்து, ஆட்டோ மற்றும் தனியார் வாகனங்கள் ஆகியவை அனுமதிக்கப்படவில்லை. எனினும் மருத்துவ அவசரத்திற்கு மட்டும் அனுமதிக்கப்பட்டன.
280 சோதனை சாவடிகளிலும் காவலர்கள் நிறுத்தம்
நகரத்தின் 280 சோதனை சாவடிகளிலும் காவலர்கள் நிறுத்தப்பட்டு அனைத்து வாகனங்க ஓட்டிகளையும் சோதனை செய்தனர்.
முக்கிய சாலைகள் மூடப்பட்டன
ஜி.எஸ்.டி சாலை, சர்தார் படேல் சாலை, காமராஜர் சாலை, ஈவிஆர் சாலை, ராஜிவ் காந்தி சாலை, ஜி.என்.டி சாலை, வேளச்சேரி-தாம்பரம் நெடுஞ்சாலை மற்றும் மற்ற சில சாலைகளும் மூடப்பட்டன.
வர்த்தக இடங்கள் மூடல்
வர்த்தக மையங்களான தியாகராச நகர், பாண்டி பசார், ரிச்சி ஸ்டிரீட், கொத்தவால் சாவடி மற்றும் புரசைவாக்கம் ஆகிய இடங்கள் முற்றிலும் மூடப்பட்டன.
பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களில் கிருமி நாசினி தெளிப்பு
அண்ணா வளைவில் அதிகாரிகள் கடந்த இரண்டு நாட்களில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களில் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
12 நாட்கள் தீவிர கொரோனா ஊரடங்கு
சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களில் 12 நாட்கள் தீவிர கொரோனா ஊரடங்கு அமலில் உள்ளது. மேலும் ஞாயிற்றுக்கிழமை முழு கொரோனா ஊரடங்கு அமலில் உள்ளது.