Home Latest News Tamil மாவட்ட எல்லைகளில் கொரோனா விதிமீறல்களை தடுக்க வாகனங்கள் தீவிர பரிசோதனை : கோவை

மாவட்ட எல்லைகளில் கொரோனா விதிமீறல்களை தடுக்க வாகனங்கள் தீவிர பரிசோதனை : கோவை

தீவிர பரிசோதனை

கோவை: மாவட்ட ஆட்சியர் கே.ராஜாமணியை தலைமையாக கொண்டு செயல்படும் குழு, அவினாசி சாலையில் உள்ள தேக்கலூர் சோதை சாவடி வழியாக செல்லும் வாகனங்களை தீவிர பரிசோதனை செய்தனர்.

16 வாகனங்கள் பரிமுதல்

இதில் தனியார் பேருந்து உட்பட 16 வாகனங்களை ஊரடங்கு சட்டத்தை மீறியதர்காக பறிமுதல் செய்தனர்.

“கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு விதிக்கப்பட்ட தடை உத்தரவுளை யாரும் மீறாமல் கண்டிப்புடன் கண்கானித்து வருகிறோம். மாவட்டங்களுக்கு இடையேயான சோதனை சாவடிகளில் வாகன சோதனையை தீவிரப்படுத்தியுள்ளோம். தேக்கலூர் சோதனை சாவடியில் சென்னை மற்றும் அதை சுற்றி உள்ள மாவட்டங்களில் இருந்து வருபவர்களின் இரத்த மாதிரிகளை சேகரிக்க மருத்துவர்கள் குழுவை நியமித்து இருக்கிறோம்,” என ராஜாமணி தெரிவித்தார்.

60 பேருடன் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் வந்த பேருந்து

திருப்பூரிலிருந்து 60 பேருடன் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் வந்த ஒரு தனியார் பேருந்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அந்த பேருந்தின் ஓட்டுனர் மற்றும் நடத்துனர் மீது வழக்கு பதிவு செய்யும்படி காவல் துறைக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவு இட்டார்.

9 பேரை அழைத்து வந்த ஆம்னி வேன் ஓட்டுனர் மீதும் வழக்கு பதியப்பட்டது.

விமானம், தொடர்வண்டி மற்றும் சாலை வழியாக வரும் மக்கள் 

அதிக மக்கள் விமானம், தொடர்வண்டி மற்றும் சாலை வழியாக கோவைக்கு வந்தவண்ணம் உள்ளனர் என ராஜாமணி தெரிவித்தார்.

ஈ-பாஸை சோதனை செய்யும் பொழுது கவனத்துடன் செயல்படும் படி காவல் துறை ஆணையர் காவல்களை அறிவுறுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here