சென்னை: மாநில அமைச்சர்களுடன் சனிக்கிழமை நடந்த சந்திப்பில் எடப்பாடி பழனிச்சாமி இந்தியா முழுக்க ஊரடங்கு அமலில் இருக்கும் போதிலும் திங்கள் முதல் கொரோனா பரவல் இல்லாத பகுதிகளில்(non-containment zones) ஊரடங்கிற்கு மிதமான தளர்வு அளிக்கப்படும் என தெரிவித்தார்.
முக்கிய அறிவிப்பு
சிறப்பு பொருளாதார மண்டலங்கள், ஏற்றுமதி, தகவல் தொழில்நுட்பம் ஆகியவை மாநிலம் முழுக்க இயங்க அனுமதி மற்றும் நெசவு தொழில் மற்றும் மற்ற தொழிற்சாலைகள் ஆகியவை மே 6 முதல் கிராமம் மற்றும் நகர பஞ்சாயத்து பகுதிகளில் குறிப்பிட்ட நிபந்தனைகளுடன் இயங்க அனுமதி என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தலைமை செயலகத்தில் நடந்த மூன்று மணி நேர ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. “மாவட்ட ஆட்சியர்கள்/ சென்னை மாநகராட்சி ஆணையர் அகியோர் இதற்கான நடவடிக்கைகளை எடுக்க மற்றும் மே 6 முதல் தொழிற்சாலைகல் பணிகளை தொடங்க அனுமதி வழங்குவார்கள். மாநில அரசு வைரஸ் பரவலை கண்கானித்து வருகிறது மேலும் பரவல் குறைந்த பின்பு மேலும் தளர்வுகள் அளிப்பது பற்றி அறிவிப்பு வெளியிடப்படும்,” என முதலமைச்சர் கூறினார்.