Home நிகழ்வுகள் தமிழகம் தமிழகத்தில் 10000-ஐ தாண்டியது கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் 10000-ஐ தாண்டியது கொரோனா பாதிப்பு

0
297
தமிழகத்தில் 1000-ஐ தாண்டியது கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் 1000-ஐ தாண்டியது கொரோனா பாதிப்பு எண்ணிக்கை. நேற்று புதிதாக கொரோனா பாத்தித்தவர்களின் எண்ணிக்கை 434 ஆகா பதிவானது. நேற்று 5 பேர் நோய் தொற்றுக்கு பலியாகியுள்ளனர்.

தமிழ்நாடு: நேற்று புதிதாக 434 பேருக்கு கொரோனா நோய் தோற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழ்நாட்டில் இதுவரை உறுதிசெய்யப்பட்ட கொரோனா தொற்றுகள் எண்ணிக்கை 10,108 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று தோற்று உறுதி செய்யப்பட 434 பேரில் 385 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள், 40 பேர் மஹாராஷ்டிராவில் இருந்தும், 2 பேர் குஜராத்திலிருந்தும், ஒருவர் கர்நாடகாவிலிருந்தும் வந்தவர்கள்.

நேற்று மட்டும் 11,672 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. நேற்று தோற்று உறுதியானவர்களில் 253 பேர் ஆண்கள், 181 பேர் பெண்கள் ஆவர்.

இதுவரை கொரோனா பாத்திக்கப்பட்ட வர்களில் 6,642 பேர் ஆண்கள், ௩,௪௬௩ பேர் பெண்கள், 3 பேர் திருநங்கையர் ஆவர். நேற்று ஒரே நாளில் 359 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர்.

இதுவரை 2,599 பேர் நோய் தொடரிலிருந்து குணமடைந்துள்ளனர். தமிழகத்தில் 38 அரசு மற்றும் 20 தனியார் ஆய்வகங்கள் என மொத்தம் 58 ஆய்வகங்கள் செயல்பட்டுவருகின்றன.

நேற்று 5 பேர் கொரோனாவிற்கு பலியானதால் தமிழகத்தில் பாலி எண்ணிக்கையும் 71 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் நேற்று 309 பேருக்கு நோய் தோற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

மேலும் 4,598 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். சென்னையில் இதுவரை பதிவான மொத்த கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை 5,945 ஆக உள்ளது.

தமிழகத்தில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களில் 12 வயதிற்கு கீழ் 583 பேரும், 13-60 வயதிற்குட்பட்டோர் 8,812 பேரும், 60 வயதிற்கு மேற்பட்டோர் என வயதுவாரியாக உள்ளனர்.

உலக சுகாதார அமைப்பின் அவசர சேவைகள் இயக்குனர் மைல் ரியான் கொரோனா வைரஸ் நிரந்தரமாக நம்மை விட்டு போவதற்கு வாய்ப்புகள் இல்லை என்று அண்மையில் கூறினார்.

உலகளவில் இதுவரை இந்த கொரோனா பெருந்தொற்றிற்கு 3,00,000 பேர் உயிரிழந்துள்ளனர்.42 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். பல உலக நாடுகள் ஊரடங்களில் தளர்வுகளை அறிவித்து வருகின்றன.

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா நோய் தொற்றுகள் எண்ணிக்கை அதன் தீவிரத்தை உணர்த்துகிறது. மக்கள் சமூக இடைவெளியை கடிபிடிப்பதுடன் பாதுகாப்பு நடவடிக்கைகளையும் பின்பற்ற வேண்டும்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here