Home நிகழ்வுகள் இந்தியா யுஜிசி தேசிய தகுதித் தேர்வு (NET) 2020: விண்ணப்பிக்க கடைசி நாள் மே 31

யுஜிசி தேசிய தகுதித் தேர்வு (NET) 2020: விண்ணப்பிக்க கடைசி நாள் மே 31

யுஜிசி தேசிய தகுதித் தேர்வு

தேசியத் தேர்வு முகமை(NTA) ஜூன் 2020க்கான யுஜிசி தேசிய தகுதித் தேர்வு எழுத விண்ணப்பிக்கும் கால அவகாசத்தை மே 31 வரை நீட்டித்துள்ளது. இந்த தேர்வை எழுத விண்ணப்பிக்காதவர்கள் மே 31 இரவு 11:50 மணி வரை விண்ணப்பிக்க அனுமதிக்கப்படுவார்கள்.

ஆரம்பத்தில் ஏப்ரல் 16 ஆக இருந்த கடைசி தேதி, கொரோனா ஊரடங்கால் மே 16 வரை நீடிக்கப்பட்டது பிறகு மேலும் நீடிக்கப்பட்டு மே 31 என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒருங்கிணைந்த மனித வள மேம்பாட்டு அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க் வெள்ளி கிழமை தனது டுவிட்டர் பக்கத்தில் இதற்கான அறிவிப்பை வெளியிட்டார்.

யுஜிசி நெட் ஜூன் 2020 தேர்வு அறிவிப்பில் ஜுன் 15 முதல் ஜூன்20 தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இருப்பினும் தேர்வும் நடக்கும் நாட்களுக்கான இறுதி அறிவிப்பை அமைச்சர் சிறிது நாட்களில் வெளியிடுவார் என தெரிகிறது.

துணை பேராசிரியர் மற்றும் இளையர் இளநிலை ஆராய்ச்சியாளர் பணி

‘துணை பேராசிரியர்’ மற்றும் ‘இளையர் இளநிலை ஆராய்ச்சியாளர்’ ஆகிய பணிகளுக்கான தேர்வை தேசியத் தேர்வு முகமை(NTA) நடத்தி வருகிறது. இந்த தேர்வு இரண்டு தாள்களாக பிரித்து நடத்தப்படுகிறது,

ஒவ்வொரு தாளுக்கும் முழு மூன்று மணி நேரம் ஒதுக்கப்பட்டு தேர்வு நடைபெறும். கணிணி அடிப்படையில் இந்த தேர்வு நடைபெறும்.

இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க மறந்தவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம்.

Previous articleசனிக்கிழமை மீண்டும் திறக்கப்படும் டாஸ்மாக்: தமிழக அரசு அதிரடி அறிவிப்பு
Next articleதமிழகத்தில் 10000-ஐ தாண்டியது கொரோனா பாதிப்பு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here