Home நிகழ்வுகள் தமிழகம் தொழில் போட்டி: பெண்ணை அடித்து துவைத்த திமுக கட்சியினர்

தொழில் போட்டி: பெண்ணை அடித்து துவைத்த திமுக கட்சியினர்

394
0
தொழில் போட்டி

தொழில் போட்டி: பெண்ணை அடித்து துவைத்த திமுக கட்சியினர்

திருமயம் பகுதியில் உள்ள ஒரு கோவில் வாசல் அருகிலேயே வாசுகி என்ற பெண் 30  வருடங்களுக்கு மேலாக பெட்டிக்கடை வைத்து வியாபாரம் செய்து வந்துள்ளார்.

கோவிலில் பூஜை செய்யத் தேவையான தேங்காய், வாழைப்பழம் இதர பூஜை சாமான் விற்பனை செய்து வந்துள்ளார்.

அப்பெண்ணின் கடைக்கு எதிரில், திருமயம் திமுக கட்சியின் ஒன்றியச் செயலாளர் சரவணன் என்பரின் அண்ணன் சிவராமன் பெட்டிக்கடை வைத்து நடத்தி வருகிறார்.

சிவராமன் கடைக்கு கூட்டமே வருவதில்லை. வருபவர்கள் அனைவரும் வாசுகியின் கடையிலேயே பொருட்கள் வாங்கியுள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த சிவராமன் தம்பி சரவணனிடம் முறையிட்டுள்ளார். வாசுகியை மிரட்டி கடையைக் காலி செய்ய முயற்சித்துள்ளனர்.

ஆனால் தொடர்ந்து வாசுகி கடையை நடத்தி வந்ததால், கடைக்குள் புகுந்து பொருட்களை வெளியில் வீசி எறிந்துள்ளனர்.

மேலும் கடையில் வாசுகியையும், தங்கை கவுரியையும் அடித்து உதைத்துள்ளனர். இதனால் பலத்த காயம் அடைந்தனர்.

உடனே அவர்கள் இருவரையும் பொதுமக்கள் மீட்டு அங்குள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவர்கள் மீது போலீசார் இன்னும் முறையான நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

Previous articleஹீரோ: சிவகார்த்திகேயனின் புதிய படத்தின் தலைப்பு!
Next article5 விமானநிலையங்கள்: அதானியிடம் கொடுத்துவிட்டார் மோடி
Editor in Chief & Founder of MrPuyal.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here