5 விமானநிலையங்கள்: அதானியிடம் கொடுத்துவிட்டார் மோடி
திருவனந்தபுரத்தில் உள்ள விமான நிலையதின் கட்டுப்பாடு, இயக்கப் பணிக்காக டெண்டர் நடைபெற்றது.
அந்த டெண்டரில் ஒரு பயணிக்கு அதானி ரூ.168 எனவும், கேரள அரசு ரூ.135 எனவும், ஜிஎம்ஆர் என்ற நிறுவனம் ரூ.63 எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
இதனையடுத்து 5 விமான நிலையங்களை 50 வருடம் இயக்கும் பொறுப்பு அதானி நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுவிட்டது.
இதனால் கடும் அதிருப்தி அடைந்துவிட்டார் கேரள முதல்வர் பினராயி விஜயன். இது குறித்து பினராயி வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
திருவனந்தபுரம் விமானநிலையம் உட்பட ஐந்து விமான நிலையங்கள் அதானி வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
ஐந்து விமான நிலையங்களின் கட்டுப்பாடு, இயக்கப் பணிகள் அதானி நிறுவனத்துக்கு டெண்டர் மூலம் கொடுக்கப்பட்டு உள்ளது.
ஒரு நபருக்கு ஐந்து விமானநிலையங்கள் கொடுக்கப்பட்டுள்ளது ஆச்சரியமாக உள்ளது. அதானிக்கு விமானங்களை எப்படி இயக்குவது என்பது பற்றித் தெரியாது.
ஆனால், நரேந்திர மோடிக்கு அதானியைப் பற்றி நன்கு தெரியும் என அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.
இதுபற்றி காங்கிரஸ் கட்சியின் எம்பி சசிதரூர் கூறியதாவது, அதானிக்கு விமான சேவையைக் கொடுத்தால் பாதிப்பு ஏதும் இருக்காது.
அதிக விமானப் போக்குவரத்து ஏற்படும். விமான நிலையங்கள் வளர்ச்சி பெரும் எனக் கூறினார்.