கொரோனா வதந்தி பரப்பிய ஹீலர் பாஸ்கரை சம்பவம் செய்த போலீஸ், ஹீலர் பாஸ்கர் ஆடியோவில் கூறியது
கொரோனா பற்றி ஒரு தவறான ஆடியோ வெளியிட்டதால் குனியமுத்தூர் போலீசால் அதிரடியாக கைது செய்யப்பட்டார் ஹீலர் பாஸ்கர்.
கொரோனா வைரஸால் உலகம் முழுவதும் 2 லட்சத்திற்கும் மேலானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 10000க்கும் மேலான உயிர்பழியாகியுள்ளது.
ஹீலர் பாஸ்கர் ஆடியோவில் கூறியது
அவர் கூறுகையில் இது இலுமினாட்டிகளின் வேலை. சும்மா இருப்பவர்களை அதிகாரிகள் ஊசி போட்டு கொன்றுவிடுகிறார்கள். அரசு சொல்வதை கேட்க வேண்டாம் என கூறியிருந்தார்.
இது போன்ற ஆடியோக்கள் அதுவாகவே வைரல் ஆகும். இதையடுத்து ஹீலர் பாஸ்கர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுகாதாரத் துறை அதிகாரி புகார் அளித்தார்
இன்று தமிழ்நாடு பொது சுகாதார சட்டம் 1939, பேரிடர் மேலாண்மை சட்டம் 2005 ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
வீட்டிலேயே பிரசவம் பார்ப்பது எப்படி என்பது குறித்த ஒரு நாள் இலவச பயிற்சி முகாமை இவர் விளம்பரப்படுத்தியதை அடுத்து அவர் கடந்த 2018-ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.