Home சினிமா கோலிவுட் அமலா பால் ரகசிய திருமணம்: வைரலாகும் 2 ஆவது கணவரின் புகைப்படம்!

அமலா பால் ரகசிய திருமணம்: வைரலாகும் 2 ஆவது கணவரின் புகைப்படம்!

772
1

Amala Paul; அமலா பால் ரகசிய திருமணம்: வைரலாகும் 2 ஆவது கணவரின் புகைப்படம்! அமலா பால் இரண்டாவது முறையாக திருமணம் செய்து கொண்ட புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அமலா பால் ரகசிய திருமணம்

அமலா பால் ரகசிய திருமணம் செய்து கொண்டார். மாப்பிள்ளை வேறு யாருமில்லை. அவர் ஒரு பாலிவுட் பாடகர்.

சிந்து சமவெளி படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை அமலா பால். ஆனால், இப்படம் அவரது கதாபாத்திரம் பற்றி பேசவில்லை.

பிரபு சாலமன் இயக்கத்தில் வந்த மைனா படத்தில் நடிகர் விதார்த் உடன் இணைந்து நடித்தார். இப்படம் அவரது கதாபாத்திரத்தில் திருப்பு முனையை ஏற்படுத்தியது.

சிறந்த நடிகைக்கான தமிழ்நாடு மாநில விருது, சிறந்த அறிமுக நடிகைக்கான விஜய் விருதும் அமலா பாலிற்கு கிடைத்தது.

இப்படத்தைத் தொடர்ந்து பல படங்களில் நடித்தார். இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் வந்த தெய்வ திருமகள் படத்தில் நடித்தார். இப்படம், அவரது வாழ்க்கையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியது.

இப்படத்தின் போது இயக்குநர் ஏ.எல்.விஜய்க்கும், அமலா பாலிற்கும் இடையில் காதல் மலர்ந்தது. நாளடைவில் திருமணம் செய்து கொள்ளும் அளவிற்கு இருவரது காதலும் வளர்ந்தது.

கடந்த 2014 ஆம் ஆண்டு ஜூன் 7 ஆம் தேதி கொச்சியில் உள்ள ஆலுவா பகுதியில் இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.

இதையடுத்து, ஒரு வாரத்திற்குள்ளாக சென்னையில், உள்ள மேயர் ராமநாதன் செட்டியார் திருமண மஹாலில் இருவருக்கும் திருமணம் நடந்தது.

திருமணத்திற்குப் பிறகு அமலா பால் நடிக்கக் கூடாது என்பது ஏ.எல்.விஜய் வீட்டாரின் கண்டிஷன். இதை ஒப்புக்கொண்டு திருமணம் செய்த அமலா பால், நாளடைவில் படங்களில் நடித்தும் வந்துள்ளார்.

இதனால், ஏ.எல்.விஜய் குடும்பத்தாருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனியாக வாழ்ந்து வந்த அமலா பால் கடந்த 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் விவாகரத்து பெற்றார்.

அதன் பிறகு ஆழ்ந்த மன வருத்தத்தில் இருந்த அமலா பால் தனிமையில், சில காலம் வெளிமாநிலங்களுக்கு சுற்றுலா சென்று வந்தார். அவ்வப்போது இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை பதிவிட்டு வந்தார்.

இதற்கு இடைப்பட்ட காலத்தில் இயக்குநர் ஏ.எல்.விஜய்க்கும், மருத்துவரான ஐஸ்வர்யாவுக்கும் கடந்தாண்டு ஜூலை 11 ஆம் தேதி சென்னையில் திருமணம் நடந்தது.

ஏ.எல்.விஜய்யின் 2ஆவது திருமணத்திற்கு அமலா பால் வாழ்த்து தெரிவித்திருந்தார். அவர் ஒரு அருமையான மனிதர்.

இனிமையானவர். அவரது 2ஆவது திருமணத்திற்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துக்கள் என்று கூறியிருந்தார்.

கடந்தாண்டு ஜூலை 24 ஆம் தேதி, தான் ஒருவரை காதலிப்பதாகவும், அவரது அன்புதான் தன்னை மாற்றியதாகவும், விரைவில் அவரை திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் கூறியிருந்தார்.

மேலும், ஒரு குழந்தை பெற்றுக்கொண்டு, இன்னொரு குழந்தையை தத்தெடுக்கவும் ஆசைப்படுவதாகவும் கூறியிருந்தார்.

வாழ்க்கையின் இந்தக் கட்டத்தில்தான் எப்போதும் பாதுகாப்பாகவும், அமைதியாகவும் உணர்வதாக தெரிவித்தார்.

இதற்கிடையில், விஷ்ணு விஷாலை காதலிப்பதாகவும், அவரை திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் தகவல் வந்தது.

தொடர்ந்து கேரளாவைச் சேர்ந்த அவரது நண்பர் அஜித் மேனன் உடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படமும், அவரை கட்டியணைத்து அவருக்கு முத்தம் கொடுக்கும் புகைப்படமும் வெளியானது.

இந்த நிலையில், தற்போது அமலா பால் ரகசியமாக திருமணம் செய்து கொண்டுள்ள புகைப்படம் சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது.

மும்பையைச் சேர்ந்த பாடகரான புவனிந்தர் சிங் என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். அப்போது எடுத்த புகைப்படங்களை புவனிந்தர் சிங் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், பதிவிட்டு ‘Wedding Throwback’ என்று குறிப்பிட்டிருந்தார்.

புகைப்படங்களை பதிவிட்ட கொஞ்ச நேரத்திலேயே புவனிந்தர் சிங் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தையே நீக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இருவருமே கடந்த சில மாதங்களுக்கு முன்பாகவே திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது குறித்து அமலா பால் எந்த கருத்தும், பதிவும் பதிவிடவில்லை.

SOURCER SIVAKUMAR
Previous articleகொரோனா வதந்தி பரப்பிய ஹீலர் பாஸ்கரை சம்பவம் செய்த போலீஸ்
Next articleஅமேசான் ஓனர் Jeff Bezos எழு பில்லியன் டாலர்கள் அபேஸ்ஆனது : Coronavirus கைவரிசை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here